Author Topic: கூமுட்டையில் உள்ள மருத்துவம்  (Read 636 times)

Offline Little Heart

உயர் இரத்த அழுத்தம் இன்று பலரின் உயிரைப் பறிக்கும் உயிர் கொல்லி நோய் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்த ஓர் விடயம் ஆகும். இந்த நோயைத் தடுக்க மருத்துவத் துறையில் பலவகையான வைத்திய முறைகளைத் தருவதற்கு மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் “கூமுட்டை” என்று அழைக்கப்படும் அழுகிய முட்டை, உயர் இரத்த அழுத்த நோயைத் தடுக்க உதவும் எனும் விடயத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் (Hydrogen Sulphide) வாயு, மனித இரத்த நாளங்களைத் தளர்வாக்கி, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்றது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள் ரூய் வாங், சாலமோன் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சுமார் ஒரு வருட காலம், எலிகளைக் கொண்டு இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த உண்மையைக் கண்டறிந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தத் தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளை மாற்றிவிட்டு, தங்களது அழுகிய முட்டை மருத்துவத்தைக் கடைபிடிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

சரி நண்பர்களே, இந்த ஆராய்ச்சி கடைசியில் எங்கே முடிகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போமே. எதிர்காலத்தில் கூமுட்டை மருத்துவமனைகளில் பயன்பாட்டில் இருந்தால், அதை இட்டு நீங்கள் ஆச்சரியப் படாதீர்கள்!