Author Topic: பறவை குளிர் காலத்தில் எவ்வாறு உயிர் வாழ்கிறது  (Read 652 times)

Offline Little Heart

உலகில் வாழும் பறவைகள் குளிர் காலம் வந்துவிட்டால் எவ்வாறு தங்களைப் பாதுகாத்து, அக்காலத்தில் உயிர் வாழ்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? பறவைகள் குளிர் காலத்தைப் பல வழிகளில் எதிர்கொள்கின்றன. பெரும்பாலான பறவைகள் தன் உடலைச் சூடாக வைத்துக் கொள்ள, வழக்கத்திற்கு மாறாக நிறைய உணவை உட்கொள்ளும். உணவிலிருந்துக் கிடைக்கப்படும் சக்தியைக் கொண்டு தன்னுடய உடல் சூட்டை அதிகரித்துக் கொள்ளும். உயரப் பறக்கும் பறவைகள் சிலவற்றால் அதிக கொழுப்பைச் சேர்த்து வைத்துக் கொள்ள முடியாததால், இவைக் குளிர் காலம் அடங்கும் வரை வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துச் செல்லும்.

இதை விட, பொதுவாக பறவைகள் தம் உடலிலுள்ள எல்லா இறகுகளையும் ஒருங்கிணைத்து அதிலிருந்து வெப்பத்தைச் சேகரிக்கின்றன. மேலும், பறவைகளின் உடலில் இயற்கையாகவே எண்ணெய் சுரப்பியுள்ளது. இதனில் இருந்து சுரக்கப்படும் எண்ணெய் பறவையின் உடலில் நீர்ப்பசையைக் குறைக்க உதவும், இதன் மூலம் பறவைகள் தன் உடலில் வெப்பத்தைக் கூட்டிக் கொள்ள உதவுகின்றது. தொடர்ந்து, குளிர் அதிகரிக்கும் தருணம், பறவைகள் தன் உடல் நடுக்கத்தை அதிகரித்துக் கொள்ளும், இதனூடாகக் குளிர் பகுதிகளுக்கு வெப்பத்தை அதன் இரத்த ஓட்டத்தின் மூலம் அனுப்பிக் கொள்ளும். இறுதியாகக் குளிர் காலத்தில் பறவைகள் தன்னுடய இனம் அழியாமலிருக்க, வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இனப்பெருக்கம் செய்யும்.

பார்த்தீர்களா, பறவைகள் குளிர்காலத்தில் உயிர் வாழ்வதற்கு, ஒரு வழி மட்டும் அல்லாமல், பல்வேறு வழிகளின் மூலம் தம்மைப் பாதுகாக்கின்றன.