மர்மமாக மறைந்துவிட்ட விமானங்கள் மற்றும் கப்பல்கள் பற்றி நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டு இருப்பீர்கள், சரி தானே? இவ்வாறான மர்மங்களுக்குப் பெயர் பெற்ற இடமென்றால் அது பெர்முடா முக்கோணம் தான். ஃபுளோரிடா, சான் ஜூவான் (போர்டோ ரிக்கோ) மற்றும் பெர்முடா பகுதிகள் அடங்கிய பகுதிதான் பெர்முடா முக்கோணம் ஆகும். இங்கு பலவிதமான விமானங்களும், கப்பல்களும் காணாமல் போயுள்ளன. இதற்கான காரணங்கள் இன்றளவும் உறுதிசெய்யப்படவில்லை என்பதே இதன் மர்மத்திற்கு அடித்தளமாக உள்ளது. இயற்கையைக் கடந்த, அமானுஷ்ய விஷயங்களை ரசிப்பவர்கள் இவ்விடத்தில் அறிவியல் விதிகள் அனைத்துமே தோற்றுப்போவதாகக் கருதுகிறார்கள். ஆனால் சிலர் இங்கு ஏற்பட்ட விபத்துகளுக்கு உபகரணங்களில் ஏற்பட்ட கோளாறு, மனிதனின் பிழைகள் அல்லது இயற்கை சீற்றங்கள் காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர்.
1950 ஆண்டில் ஃப்ளைட்-19 என்ற விமானம் காணாமல் போனதில் இருந்து தான் இந்தப் பெர்முடா முக்கோணத்தின் மீதான பார்வை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த விமானத்தின் தலைமை அதிகாரி கடைசியாக, “நாங்கள் வெள்ளைநிற நீருக்குள் இறங்குகிறோம், எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை, நீர் பச்சையாக உள்ளது, வெள்ளை இல்லை” என வித்தியாசமாகப் பேசியதாகத் தெரியவந்தது. ஒரு சில கடற்படை அதிகாரிகள் அந்த விமானங்கள் செவ்வாய் கிரகத்திற்குப் பறந்து போயிருக்கலாம் என்று கூட கூறுகின்றனர்.
ஆனால் இத்தனை விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காணாமல் போனால், அதற்குப் பின்னால் நிச்சயமாக ஏதோ ஒரு மர்மம் இருக்கத் தானே வேண்டும்? இந்தப் பெர்முடா முக்கோணத்தினைப் பற்றி நீங்களும் ஏதும் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா நண்பர்களே?