Author Topic: காதல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு  (Read 505 times)

Offline thamilan

காதல் தோல்வி
எனக்கு மட்டும் தானா
பாருங்கள் அந்த அலைகளை
எத்தனை ஆவலுடன்
கரைக்கு தாவி வந்து
காதலுடன் தட்டித் தழுவி
ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறதே
என்றாலும் அந்த அலைகளின்
காதல் ஈரம் இன்னும்
மணல்களில் ஒட்டிகொண்டிருகிறதே
உன் மனதிலோ
என்காதல் இருந்த சுவடே இல்லாமல்
அழித்து விட்டாயே

அன்று
உன்காதல் கிடைகாதா என
தூக்கத்தை தொலைத்த இரவுகள் பல
இன்று
உன்காதலை மறக்கமுடியாமல்
தூக்கத்தை தொலைத்த இரவுகள்
பலப்பல

காதலித்துப் பார் நீ
கவிஞன் ஆவாய் என்றான்
கவிஞன் வைரமுத்து
நானும் காதலித்தேன்
கவிஞன் ஆனேன்
காதல் தோல்வி என்னை
கவிஞன் ஆக்கியது

காதலித்துப் பார்
முதுமையிலும் இளமை ஆவாய்
என்றான் அதே கவிஞன்
நானும் காதலித்தேன்
உன்னை காதலித்ததின் பலன்
தாடி வளர்ந்து தலைமுடி வளர்ந்து
இளமையிலும் முதுமையாக தெரிகிறேன்

காதல் ஒரு
கண்ணாமூச்சி விளையாட்டு என்பார்கள்
உண்மை தான்
நான் உன்னை தொலைத்து விட்டு
தேடி அலைகிறேனே
« Last Edit: August 29, 2014, 10:47:14 PM by thamilan »