Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ ஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ ஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி? ~ (Read 804 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223141
Total likes: 27837
Total likes: 27837
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ ஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி? ~
«
on:
July 22, 2014, 05:23:25 PM »
ஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி?
பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!
பெரும்பாலான வீடுகளில் வரவைவிட செலவு அதிகமாக உள்ளது. இந்தச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காகப் பலவழிகளை முயற்சி செய்கிறார்கள் பலரும். இதில் பலர் தோல்வியடைந்து, ஒருகட்டத்தில் சிக்கனத்துக்கான முயற்சியையே விட்டுவிடுகிறார்கள்.
செலவைக் குறைப்பதற்கு சின்னச் சின்ன விஷயங்களைச் செய்தாலே போதும்; அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அவை என்னென்ன என்பது குறித்து சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
சேமிப்புக்கு முதலிடம்!
''சம்பளம் வந்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். சேமிப்புக்கு போக மீதமுள்ள தொகையில் செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. உங்கள் மொத்த வருமானத்தில் வாடகைக்கு இத்தனை சதவிகிதம், மளிகைக்கு இத்தனை சதவிகிதம், குழந்தைகள் பள்ளி/கல்லூரி கட்டணத்துக்கு இத்தனை சதவிகிதம் என நீங்கள் திட்டமிடுகிற மாதிரி, எத்தனை சதவிகித பணத்தை சேமிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அந்தப் பணத்தை முதலிலேயே எடுத்து வைத்துவிடுவது அவசியம். இப்படி செய்யும்போது சேமிப்பதில் எந்தவிதமான தடங்கலும் வராது.
இதேபோல, மியூச்சுவல் ஃபண்ட், ஆர்.டி, இன்னும் பிற சேமிப்புக்கு முடிந்தவரை இசிஎஸ் கொடுத்துவிடுவது நல்லது. இல்லையெனில் இன்று கட்டலாம், நாளை கட்டலாம் என கடைசியில் பணம் செலுத்தாமல் போவதற்கான சூழ்நிலை உருவாகும்.
செலவு செய்யும் மனோபாவம்!
மாத சம்பளம் வாங்குபவர்கள், பிசினஸ் செய்பவர்கள் என யாராக இருந்தாலும் கையில் பணம் கிடைத்தவுடன் என்ன செலவு செய்யலாம் என்று யோசிக்கக்கூடாது. எவ்வளவு பணம் கிடைத்துள்ளது, இதில் அவசியம் செய்யவேண்டிய செலவுகள் என்னென்ன, அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
செலவு என்று வரும்போது, முதலில் கட்டாயம் செய்யவேண்டிய செலவு களுக்கு முன்னுரிமை தரவேண்டும். இதுபோக உள்ள செலவுகள், இப்போதைக்கு உடனடியாகத் தேவைப்படாது என்பதால், நிதானமாக யோசித்து, அவசியம் என்றால் மட்டுமே செய்யலாம்.
பட்ஜெட் அவசியம்!
அடுத்து, சம்பளம் வந்தவுடன் பட்ஜெட் போடுவது முக்கியம். இப்படி பட்ஜெட் போடும்போது கடந்த மாத பட்ஜெட்டையும் எடுத்து வைத்துக்கொண்டு, பட்ஜெட் போட வேண்டும். அப்போதுதான் கடந்த மாதம் எவ்வளவு செலவு ஆனது, இந்த மாதம் எவ்வளவு செலவு உள்ளது என்பதைத் தெரிந்துக்கொள்ள முடியும்.
மேலும், பட்ஜெட் போட்டு செலவு செய்வதோடு, தினசரி செலவுகளையும் எழுதிவைக்க வேண்டும். அப்போது தான் பட்ஜெட்டைவிட அதிகமாக ஏதாவது செலவாகியுள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு அதைக் குறைக்க முடியும்.
பார்த்ததும் வாங்கக் கூடாது!
பெரும்பாலான பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பொருட்கள் வாங்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள். அதாவது, ஏதாவது ஒரு ஆஃபர் என்றதும் உடனே அதை வாங்கத் துடிக்கிறார்கள். எந்த ஆஃபர் என்றாலும் அதனால் நமக்கு என்ன நன்மை என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்துப் பார்த்து வாங்குவது நல்லது. இப்படி செய்தால், அநாவசியமாகச் செலவு செய்வதையும் நம்மால் தடுக்க முடியும். தேவையில்லாதப் பொருளை வாங்கிவிட்டோமே என்று பிற்பாடு கவலைப்படவும் தேவை இருக்காது.
கிரெடிட், டெபிட் கார்டு வேண்டாம்!
ஷாப்பிங் செல்லும்போது என்ன வாங்கப்போகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அந்தப் பொருட்கள் வாங்க தேவையான பணத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு செல்லாம். கையில் காசிருக்கும்போதுதான் தேவையில்லாதப் பொருட்களையும் நாம் வாங்குகிறோம். இது கஸ்டமர் சைக்காலஜி சொல்லும் உண்மை! இதேபோல, கிரெடிட், டெபிட் கார்டில் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். இதன்மூலமும் தேவையில்லாதப் பொருட்கள் வாங்குவதை நம்மால் தடுக்க முடியும். தவிர, வட்டிச் செலவும் மிச்சமாகும்.
சின்ன, சின்னச் சேமிப்பு!
மாத சம்பளம் வாங்குபவர்களுக்குக் கட்டாயம் பிஎஃப் பிடிக்கப்படும். இதனுடன் கூடுதலாகக் குறிப்பிட்ட அளவு தொகையைச் சேமிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். இந்தத் தொகை உங்களின் ஓய்வுக்காலத் தேவைகளுக்குக் கைகொடுக்கும். மேலும், வீடு வாங்குவதற்கு, திடீரென ஏற்படும் மருத்துவச் செலவு, பிள்ளைகளின் உயர்கல்வி என முக்கியமான தேவை களுக்கு இதிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல, பிபிஎஃப் முதலீட்டுக்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. ஏனெனில், இதில் முதலீடு செய்யப்படும் தொகை 15 ஆண்டுகளுக்குத் திரும்ப எடுக்க முடியாது. 2014-ம் ஆண்டுத் தொடங்கி, மாதம் ரூ.1000 என அடுத்த 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், 2029-ம் ஆண்டு உங்கள் கையில் சுமார் ரூ.3,71,000 இருக்கும். இதில் குழந்தை களின் உயர்கல்வி, திருமணம் போன்ற செலவுகளைச் செய்யலாம்.
மேற்கூறிய முதலீடுகள் ஆண்டுக் கூட்டு வட்டி தரக்கூடிய திட்டங்கள். இப்படி செய்யப்படும் சின்னச் சின்னச் சேமிப்புகள் நமக்கு சுமையாக இருக்காது. பிற்காலத்தில் பெரிய தொகையாக நம்மிடம் சேர்ந்து இருக்கும்.
அடிக்கடி வாங்கும் சேலைகள்!
அடிக்கடி சேலை வாங்குவதும், அழகு சாதனப் பொருட்களை வாங்குவதும் பெண்களுக்கு இஷ்டமான விஷயங்கள். இளவயதில் இப்படி ஓர் ஆசை இருப்பதில் தவறே இல்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, இதற்கான செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. விலை குறைந்த பத்து சேலைகளை வாங்குவதைவிட, நல்ல தரத்தில், டிசைனில் ரிச்சாக ஐந்து சேலைகளை வாங்குவது புத்திசாலித்தனம். தவிர, குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் சிக்கனமாகச் செலவு செய்யும்போதுதான் குழந்தை களும் பார்த்துப் பார்த்து செலவு செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வார்கள். பெற்றோர்களே தாம்தூம் என்று செலவு செய்தால், குழந்தைகளும் பிற்காலத்தில் அப்படித்தான் இருப்பார்கள்.
சமையலிலும் சிக்கனம்!
பெண்கள் நினைத்தால் சமையலிலும் சிக்கனத்தைப் பின்பற்றி குடும்பத்துக்கு நிறைய சேமித்துத் தரமுடியும். அதாவது, பருவநிலைக்கு ஏற்ப விலை குறைவாக உள்ள காய்கறிகள், பழங்களை வாங்கலாம். அதேபோல இறைச்சி வாங்க வேண்டுமெனில் வாரம் ஒருமுறை மட்டும் வாங்கலாம். காய்கறி விலை அதிகமாக இருக்கும்போது பயறு வகைகளைப் பயன்படுத்தலாம்'' என செலவுகளைக் குறைத்து, சேமிப்பை உயர்த்தும் பலவழிகளைச் சொன்னார் பத்மநாபன்.
முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே கிடையாது. முயற்சித்துப் பாருங்களேன்!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ ஹோம் பட்ஜெட்: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பது எப்படி? ~