Author Topic: ~ 30 வகை வாழை சமையல்! ~  (Read 2633 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #15 on: July 20, 2014, 11:39:15 AM »
குறுக்கு காளன்



தேவையானவை:
நறுக்கிய வாழைக்காய் - ஒரு கப், துருவிய தேங்காய் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, நீர் விடாமல் கடைந்த மோர் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று.

செய்முறை:
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும். நறுக்கிய வாழைக்காயை உப்பு,  மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். பாதியளவு வெந்த தும் தேங்காய் விழுதைச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் கடைந்த மோரை அதில் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, நீர் முழுவதும் வற்றும்படி குறுக வைத்து இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #16 on: July 20, 2014, 11:41:43 AM »
வாழைக்காய்  கதம்ப பக்கோடா



தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, கடலை மாவு - ஒன்றரை கப், அரிசி மாவு - அரை கப், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை,  நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய், பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
வாழைக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். எண்ணெயை அடிகனமான வாணலியில் காயவிடவும்.  நறுக்கிய வாழைக்காய், பச்சை மிளகாய், மற்ற காய்கறிகளுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிசிறவும். காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் இருந்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெயை எடுத்து சேர்த்து நன்கு பிசிறி, கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு மேலும் பிசிறவும். காயும் எண்ணெயில் மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #17 on: July 20, 2014, 11:43:01 AM »
நேந்திரம்பழ பாயசம்



தேவையானவை:
நேந்திரம்பழம் - 3, வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 3 டேபிள்ஸ்பூன், உடைந்த முந்திரித்துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப்.

செய்முறை:
தேங்காய்த் துருவலை சிறிதளவு நீர்விட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். நேந்திரம் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து கரைந்துவிடாமல் வேகவைக்கவும். வெந்ததும் வெல்லத்தைச் சீவி சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும், அரைத்த தேங்காயைச் சேர்த்து, ஒரு கொதி வெந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும். முந்திரித்துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #18 on: July 20, 2014, 11:44:36 AM »
நேந்திரங்காய் சிப்ஸ்



தேவையானவை:
முற்றிய நேந்திரம் வாழைக்காய் - 3, மஞ்சள் தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
நேந்திரங்காய்களை அடி, நுனி இரண்டையும் நறுக்கிவிட்டு, தோலை உரிக்கவும். அடிகனமான வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூளைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் நேரடியாக காய்களை (சிப்ஸ் கட்டையால்) வட்டமாக எண்ணெயில் படும்படி சீவவும். எண் ணெயில் நன்கு கலந்துவிடவும். சலசலவென்று சத்தம் வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் கரைசலை கால் டீஸ்பூன் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் விட்டு, நன்கு கலந்துவிடவும். மறுபடி சத்தம் வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் கரைசல் கால் டீஸ்பூன் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் விட்டு, நன்கு கலந்துவிடவும். மறுபடி சலசலவென்று சத்தம் வந்ததும் வறுவலை எடுத்து எண்ணெயை வடிய வைத்து, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.
இந்த சிப்ஸ் பல மாதங்கள் கெடாது. இதை தேங்காய் எண்ணெயில்தான் பொரிக்க வேண்டும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #19 on: July 20, 2014, 11:46:20 AM »
இலை அப்பளம்



தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, வாழை இலை - தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கல் அரிசியை முதல் நாள் இரவே கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். (அரைப்பதற்கு முன்பு 40 நிமிடங்கள் அரிசியை ஊற வைக்கவும்), மறுநாள் காலை மாவுடன் உப்பு, சீரகம் சேர்க்கவும். இட்லிப்பானையில், தட்டில் வாழை இலையை வைத்து, அதில் ஒரு கரண்டியால் மாவை வட்ட வடிவில் ஊற்றி வைத்து 2 நிமிடம் கழித்து எடுத்தால்... இலை அப்பளம் தயார். இதே மாதிரி முழு மாவையும் ஊற்றி எடுத்து வெயில் காய வைத்து, இரண்டு மணி நேரத்தில் வாழை இலையை விட்டு எடுத்து விடலாம். எடுத்த அப்பளத்தை துணியில் போட்டு, வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். 4 தினங்கள் பகலில் இவ்வாறு காயவைத்து எடுக்கவும். வாழை இலை அப்பளத்தை அதிக அளவில் செய்து வைத்துக்கொண்டால், ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். இதை எண்ணெயில் பொரித்தோ, தணலில் சுட்டோ  பயன்படுத்தலாம்.

குறிப்பு:
பச்சை மிளகாய் - கசகசாவை அரைத்து, அப்பளம் தயாரிக்கும் மாவில் சேர்த்தால்... சற்று காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம் இருக்கும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #20 on: July 20, 2014, 11:47:40 AM »
வாழைத்தண்டு சூப்



தேவையானவை:
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், பொடியாக நறுக்கிய  கேரட், பீன்ஸ் - தலா 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு, அது உருகியதும் நறுக்கிய வாழைத்தண்டு, கேரட், பீன்ஸ், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கி, 2 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சோள மாவைக் கரைத்து ஊற்றி, மேலும் 2 நிமிடம் கொதித்து சூப் பதம் வந்ததும், மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #21 on: July 20, 2014, 11:49:42 AM »
வாழைத்தண்டு கூட்டு



தேவையானவை:
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், மோர் - 3 டேபிள்ஸ்பூன், வேகவைத்த பயத்தம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க:
துருவிய தேங்காய் - 5 டேபிள்ஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - 3 இலைகள், கொத்தமல்லித் தழை - ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வாழைத்தண்டை உப்பு, மஞ்சள்தூள், மோர், சிறிதளவு நீர் சேர்த்து வேகவிடவும். இதனுடன் வேகவைத்த பயத்தம்பருப்பைச் சேர்க்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்.
வாழைத்தண்டு கூட்டு, மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #22 on: July 20, 2014, 11:51:44 AM »
வாழைத்தண்டு ஸ்வீட் பச்சடி



தேவையானவை:
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், சீவிய வெல்லம் - அரை கப், துருவிய தேங்காய் - கால் கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிட்டிகை.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு வாழைத்தண்டை வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சீவிய வெல்லத்தைச் சேர்த்து இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து பச்சடி பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #23 on: July 20, 2014, 11:53:03 AM »
வாழைப்பழ கீர்



தேவையானவை:
மலை வாழைப்பழம் - 3, பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள், லெமன் ஃபுட் கலர் - தலா ஒரு சிட்டிகை, மெல்லியதாக சீவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், மெல்லியதாக சீவிய முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். இதனுடன் ஒரு கப் பால், ஒரு கப் நீர் சேர்த்து குழைய வேகவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு, வாழைப்பழத்தை மசித்து சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, பாதாம், முந்திரியால் அலங்கரிக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #24 on: July 20, 2014, 11:54:31 AM »
வாழைப்பழ கஸ்டர்ட்



தேவையானவை:
நறுக்கிய வாழைப்பழம் - ஒரு கப், நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், பலாச்சுளை, முழு பச்சைத் திராட்சை (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - அரை கப், கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
பாலை   சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவும். மிதமாக சூடாகும்போதே கால் கப் பாலை எடுத்து கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும். பால் - கஸ்டர்ட் பவுடர் இரண்டும் சேர்ந்து வரும்போது இறக்கி, ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவிடவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்கள் முன்பு எடுத்து, பழங்களைச் சேர்த்து கலந்துவிடவும்.

குறிப்பு:
பரிமாறுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு பழங்களை 'கட்’ செய்தால் போதும். வெனிலா, ஸ்ட்ராபெர்ரி என்று எந்த ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடர் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #25 on: July 20, 2014, 11:55:55 AM »
வாழைப்பழ ஸ்மூத்தி



தேவையானவை:
வாழைப்பழம் - 3, தயிர் - ஒன்றரை கப், விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 3, தேன் - ஒரு டீஸ்பூன், தூளாக்கிய பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒருசிட்டிகை.

செய்முறை:
பேரீச்சம்பழத்தை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்த்து ஓடவிட்டு, உப்பு, பனங்கற்கண்டு, தேன் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். பிறகு, வாழைப்பழத்தைச் சேர்த்து அடித்து, இறுதியில் தயிரும் சேர்த்து நுரைவரும் வரை அடித்து நிறுத்தவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கினால்... சுவையான, சத்தான வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #26 on: July 20, 2014, 11:57:34 AM »
வாழைப்பழ அப்பம்



தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சரிசி - அரை கப், உளுந்து, ஜவ்வரிசி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், நன்கு கனிந்த மஞ்சள் வாழைப்பழம் - 2, உடைத்த முந்திரித் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், உலர் திராட்சை - 3 டேபிள்ஸ்பூன், நெய் - சமையல் எண்ணெய் கலவை - 6 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, ஜவ்வரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் கெட்டியாக அரைத்து, 6 மணி நேரம் புளிக்கவிடவும். துருவிய தேங்காயை நீர் விட்டு கெட்டியாக அரைத்து மாவில் சேர்த்து, பொடித்த வெல்லத்தையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து, உப்பு, பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்க்கவும். மீண்டும் நன்றாகக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் - எண்ணெய் கலவையை கொஞ்சமாக விட்டு, மாவினை ஊற்றி, மேலே முந்திரி, திராட்சையை தூவி, ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவினை கரண்டியால் எடுத்து ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டும் எடுக்கலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #27 on: July 20, 2014, 11:58:54 AM »
பஞ்சாமிர்தம்



தேவையானவை:
வாழைப்பழம் - 10, நாட்டு சர்க்கரை - 100 கிராம், கொட்டை நீக்கிய பேரீச்சை - 50 கிராம், உலர் திராட்சை - 25 கிராம், நெய் - 50 கிராம்.

செய்முறை:
வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும். பேரீச்சையையும் சிறிய துண்டுகளாக்கவும். இவற்றுடன் உலர் திராட்சை, நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்துப் பிசைந்து, சாப்பிடக் கொடுக்கவும் (விருப்பப்பட்டால், சிறிதளவு கல்கண்டு சேர்க்கலாம்).
இதில் சத்துக்கள் ஏராளம்!

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #28 on: July 20, 2014, 12:00:37 PM »
வாழைத்தண்டு - ஸ்வீட் கார்ன் பொரியல்



தேவையானவை:
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு (சோளம் அளவுக்கு நறுக்க வேண்டும்) - ஒரு கப், மோர் - 3 டேபிள்ஸ்பூன், ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வாழைத்தண்டை உப்பு, மஞ்சள்தூள், மோர் சேர்த்து அரைவேக்காடாக வேகவிட்டு... சிறிதளவு தண்ணீர், ஸ்வீட் கார்ன் சேர்த்து, வாழைத்தண்டு - ஸ்வீட் கார்ன் இரண்டும் குழைந்துவிடாமல் வேகவைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து இதனுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226943
  • Total likes: 29031
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை வாழை சமையல்! ~
« Reply #29 on: July 20, 2014, 12:01:53 PM »
மொளகூட்டல்



தேவையானவை:
வாழைக்காய் - ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - அரை கப்,  மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். வாழைக்காயை தோல் சீவி, நறுக்கவும். இத னுடன் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வேக விடவும். பின்னர் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்த தேங்காய் விழுதை கொதிக்கும் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூளை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். பின்னர், இறக்கி எல்லாவற் றையும் நன்றாக கலந்துவிடவும்.