Author Topic: ~ 30 வகை நம்ம வீட்டு சமையல்!! ~  (Read 1903 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


காலையில் எழுந்தவுடன் ரொட்டித்துண்டில் ஜாம் தடவியோ, கார்ன் ஃப்ளேக்ஸை பாலில் கலந்தோ... நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகம் விரையும் அவசர உலகத்தின் பிரதிநிதிகளாக நம்மில் பலரும் ஆகிவிட்ட காலகட் டம் இது. முன்பெல்லாம் பாட்டியும், பெரியம்மாவும் நம்மை வட்டமாக சுற்றி உட்காரவைத்து, சாப்பாடு கலந்து கையில் போடும்போது, அதைப் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவோம்.



இரண்டு, மூன்று ரவுண்டிலேயே செய்து வைத்ததெல்லாம் காலியாகிவிடும். அந்த டேஸ்ட்டை நினைத்து ஏக்கப்பெருமூச்சு விடுபவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில்... கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா என்று வழிவழியாக நமக்கு கொண்டு சேர்த்த உணவு வகைகளை ஆராய்ந்து 30 வகை நம்ம வீட்டு சமையல் ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.
''நொறுங்கத் தின்னா நூறு வயசுன்னு சொல்வாங்க. நான் இங்க கொடுத்திருக்கிற ரெசிப்பி  களை அக்கறையோட பண்ணுங்க, நிதானமா சாப்பிடுங்க, ஆரோக்கியமா இருங்க'' என்று நேசத்துடன் தலைவருடிக் கூறுகிறார் பத்மா.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கூழ் தோசை



தேவையானவை:
பச்சரிசி - 250 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் ஸ்பூன் எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். ஒரு கிண்ணம் மாவை எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து வாணலியில் விட்டு நன்கு கிளறி கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை மீதமுள்ள மாவுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்து, சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி... கலந்து வைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து (மிதமான தீயில் அடுப்பை எரியவிடவும்) மாவை பரவலாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, நன்கு வெந்த உடன் எடுக்கவும்.

குறிப்பு:
இந்தத் தோசைக்கு உளுந்து தேவை இல்லை. ரவா தோசை போல டேஸ்ட்டாக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தேங்காய் தோசை



தேவையானவை:
தேங்காய்த் துருவல் - 2 கப், பச்சரிசி - 200 கிராம், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பம் அளவில் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
தேங்காய் அதிகம் மிகுந்துவிடும் சமயத்தில், அதைப்  பயன்படுத்தி இந்த தோசையைத் தயாரிக்கலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புளிப் பொங்கல்



தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, காய்ந்த மிளகாய் - 2, கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசியை  உப்புமா ரவை பதத்துக்கு மிக்ஸியில் உடைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதனுடன் அரிசி ரவையை சேர்க்கவும். புளிக் கரை சலும், தண்ணீரும் சேர்த்து ரவை யின் அளவுக்கு நான்கு பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, ஊற்றிக் கிளறி, குக்கரை மூடி, மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
இதற்கு பொரித்த அப்பளம், வடகம் சிறந்த காம்பினேஷன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பச்சரிசி மாவு உப்புமா



தேவையானவை:
பச்சரிசி மாவு - 200 கிராம், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி மாவுடன் உப்பு சேர்த்து, புளித் தண்ணீர் விட்டு கெட்டியாக இல்லாமல், தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, மாவை சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கறிவேப்பிலை - மிளகு - பூண்டு குழம்பு



தேவையானவை:
பூண்டு - 100 கிராம், மிளகு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மில்லி.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அரைத்துக்கொள்ளவும். பூண்டினை தோல் உரித்து எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வதக்கிய பூண்டு சேர்த்து, அரைத்து வைத்ததையும் சேர்க்கவும். பூண்டு வெந்ததும், கடுகு - உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கருப்பட்டி தோசை



தேவையானவை:
கருப்பட்டி - 100 கிராம், கோதுமை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 4 டீஸ்பூன், நெய் - 100 மில்லி, தேங்காய்த் துருவல் - ஒரு கப்.

செய்முறை:
கருப்பட்டியை பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தீயை மிதமாக வைத்து, மாவை கல்லில் ஊற்றி, இருபுறமும் நெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
இதே மாவில் அப்பம் தயாரிக்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மோர்க்களி



தேவையானவை:
இட்லி அரிசி - 200 கிராம், புளித்த தயிர் - 100 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மோர் மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம்ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை சேர்க்கவும். கடுகு கொஞ்சம் வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அரிசி மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கரைத்து இதில் விட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு:
ஒரு பெரிய பிளேட்டில் இதனைப் போட்டு ஆறிய உடன் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கத்திரிக்காய் ரசவாங்கி



தேவையானவை:
கத்திரிக்காய் - 250 கிராம், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு சிறிய கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும். துவரம் பருப்பை வேகவைக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து வேகவிடவும். இதனுடன் அரைத்து வைத்த பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.
இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பீர்க்கங்காய் சட்னி



தேவையானவை:
பீர்க்கங்காய் (சிறியது) - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, பீர்க்கங் காயை தோல் சீவி நறுக்கி வதக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். வதக்கிய பீர்க்கங் காயுடன் தேங்காய்த் துருவல், உப்பு, வறுத்த கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி எல்லாம் சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, கடுகு தாளித்துக் கலந்து பரிமாறவும்.
இது... தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை நம்ம வீட்டு சமையல்!! ~
« Reply #10 on: July 08, 2014, 10:24:58 AM »
வாழைப்பூ பொரியல்



தேவையானவை:
சிறிய வாழைப்பூ - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி நறுக்கி... உப்பு,         மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, ஆறிய உடன் நன்கு பிழிந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, வேகவைத்த வாழைப்பூ, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை நம்ம வீட்டு சமையல்!! ~
« Reply #11 on: July 08, 2014, 10:26:10 AM »
பப்பாளி கூட்டு



தேவையானவை:
பப்பாளிக்காய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பாசிப்பருப்பு - ஒரு கப்,  பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பப்பாளிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் வேகவைத்த பப்பாளிக்காய், வேகவைத்த பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை நம்ம வீட்டு சமையல்!! ~
« Reply #12 on: July 08, 2014, 10:27:30 AM »
நெல்லிக்காய் பச்சடி



தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்,  இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
நெல்லிக்காயை நறுக்கி, கொட்டை நீக்கி இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை தயிருடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை நம்ம வீட்டு சமையல்!! ~
« Reply #13 on: July 08, 2014, 10:28:49 AM »
பாகற்காய் பிட்லை



தேவையானவை:
பாகற்காய் - 200 கிராம், புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
துவரம்பருப்பை நன்கு வேகவைக்கவும். பாகற்காயை வில்லைகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைக்கவும். சிறிது வெந்த உடன் தண்ணீரை வடிக்கவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வேகவைத்த பாகற்காயை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்திருக்கும் விழுது, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து இதனுடன் சேர்த்து இறக்கினால்... பாகற்காய் பிட்லை தயார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226351
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை நம்ம வீட்டு சமையல்!! ~
« Reply #14 on: July 08, 2014, 10:30:23 AM »
பிரண்டைத் துவையல்



தேவையானவை:
இளம் பிரண்டை - 10 துண்டுகள், புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பிரண்டைத் துண்டுகளை பொடியாக நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, தோல் சீவி நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை தனியாக எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து... புளி, உப்பு, தேங்காய் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

குறிப்பு:
இந்தத் துவையல், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.