Author Topic: ~ நண்டு குழம்பு! ~  (Read 372 times)

Online MysteRy

~ நண்டு குழம்பு! ~
« on: July 07, 2014, 11:14:30 AM »
நண்டு குழம்பு!



தேவையானவை:
நண்டு - 6 (பெரியது), தக்காளி - ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது), தேங்காய்ப்பால் - ஒரு கப்,  தனி மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்,  சிக்கன் மசாலா - 3 டீஸ்பூன்,  மஞ்சள்தூள் - சிறிதளவு, கொத்தமல்லி இலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
நண்டை சுத்தம் செய்து உடம்பை மட்டும் எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு,  சிக்கன் மசாலா,  தனி மிளகாய் தூள்,  மஞ்சள்தூள், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் நண்டை போட்டு வேகவிடவும். நண்டு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையில் அசத்தும் இந்தக் குழம்பு, செய்வதற்கு மிகவும் ஈஸி!