Author Topic: ~ வாழ்க்கை தத்துவங்கள்... ~  (Read 646 times)

Offline MysteRy

வாழ்க்கை தத்துவங்கள்...




* ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு.
ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு.
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம்.

* விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும்.

* நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது

* வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே.

* வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல!

* கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ மற்றவரை நம்புகின்றன

* துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.

* நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன

* அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது – ஓர் அனுபவசாலி

* நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.

* அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- காந்தியடிகள்

* வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர்

* மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே

* கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்

* ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்
எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிடஅதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்