பழமொழிகள் பற்றி பழமொழிகள்!!!

1. பழமொழியை எதுவும் வெல்ல முடியாது! - அயர்லாந்து
2. நல்ல பழமொழி எந்த நேரமும் பலனளிக்கும்! - அமெரிக்கா
3. நல்ல சிந்தனையில் இருப்பதற்காகவே பழமொழிகள்! - பிரான்ஸ்
4. உலகின் நல்லறிவெல்லாம் பழமொழிகளுக்குள் அடக்கம்! - இங்கிலாந்து
5. பழமொழிகள் சிந்தனையின் திறவுகோல்! - எஸ்டோனியா
6. பழமொழிகள் உண்மையின் குழந்தைகள்! - ஸ்காட்லாந்து
7. அனுபவத்தின் பொருள் விளங்கும்படி உள்ளவையே பழமொழிகள்! - ஜெர்மனி
8. பழமொழிகள் மக்கள் புழங்கும் நாணயங்கள்! - ரஷ்யா
9. சிறு பழமொழியிலிருந்து பெரிய ஆறுதல் கிடைக்கும்! - ஸ்விட்சர்லாந்து
10. காலம் கழிகிறது; ஆனால் பழமொழிகள் நிலைத்து நிற்கின்றன! - இந்தியா