Author Topic: ~ விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:- ~  (Read 1357 times)

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.

* ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.

* உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

* தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.

* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரிந்தாலு<ம் சரி, புரியாமல் போனாலும் சரி... உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போவதாக இருந்தாலும் சரி... உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணு அளவு கூட மாறிச்சென்று விடாதே.

* உங்களுக்குள்ளேயே தெய்வீகத் தன்மை ஒளிந்து கிடக்கிறது. அதை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதும் தான் முக்கியம்.

* "உதவி' என்ற சொல்லை உனது உள்ளத்திலிருந்தே விலக்கிவிடு. நீ உதவி செய்ய முடியாது. அப்படி நீ நினைப்பது தெய்வத்தைக் குறை கூறுவதாகும். தெய்வத்தின் விருப்பத்தினால் தான் நீ இங்கு இருக்கிறாய். தெய்வத்தை வழிபடத்தான் முடியுமே தவிர, தெய்வத்துக்கு உதவி செய்வதாக கூறுவது தவறாகும். தெய்வத்திற்கு மிஞ்சிய சக்தியில்லை.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* அனைத்திலும் கடவுளைக் காண்பது தான் மனிதனின் லட்சியம். அனைத்திலும் பார்க்க முடியாவிட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.

* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவாற்றலால் ஒரு போதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்துக் கொண்டு போகிறது.

* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக் கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்ககூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.

* எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள், நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள்.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக்கின்றான். அவனை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.

* தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.

* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூயவராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டுமானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.

* உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.

* எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதியுடன் இருங்கள்.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* நன்மை பெற வேண்டுமானால் வாழும் தெய்வமாகிய மனிதர்களை வழிபடுங்கள். அதாவது ஒவ்வொரு மனிதனையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கம்.

* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம், ஆண்டவனுக்கு தொண்டு செய்தவனாகிறோம்.

* ஏழைகளிடமும், பலமற்றவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே, அவரை உண்மையாக வணங்குபவனாவான்.

* எதிர்வாதம் எதுவுமின்றிக் குருவிற்குக் கீழ்ப்படிதலும், பிரம்மச்சரியத்தைக் கண்டிப்பாக பின் பற்றுதலும் வெற்றி பெறுதற்குரிய ரகசியங்களாகும்.

* பெரியவர்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள், அதன் விளைவாக வரும் தன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.

* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.

* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவையாகும்.

* எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். அச்சமுள்ளவன் உலகில் வாழத் தகுதியற்றவன்

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* அறிவார்ந்து சிந்திக்கும்போது தான், பிழைகளை நம்மால் அகற்ற முடியும்.

* ஞானம் புறவுலகில் இருந்து வருவது இல்லை. இயல்பாகவே மனிதனுக்குள் எப்போதும் இருக்கிறது.

* மனஉறுதியை எப்போதும் இழக்கக் கூடாது. ஏழை, எளியோரின் மருந்து அது ஒன்றே.

* எல்லாருக்கும் இன்பம் அளிக்கும் ஒரே மாதிரியான பொருள் உலகில் இல்லவே இல்லை.

* தோல்வி இல்லாத வாழ்வால் பயன் உண்டாகாது. வாழ்வின் சுவையே போராட்டத்தில் தான் இருக்கிறது.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.

* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.

* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.

* கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.

* மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.

* கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

* தீமையைச் செய்வதால், நமக்கு நாமே தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம்.

* சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது! நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.

* சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ் என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி அவனிடமிருந்து வெளிப்படும்.

* நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பது சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநலஎண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

* பெரியவர்கள் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள், அதன் விளைவாக வரும் தன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.

* இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக்கூடம், இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ள வந்துள்ளோம்.

* பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல, மாறாக வலிமையை குறித்துச் சிந்திப்பதாகும்.

* அனைத்துவிதமான அறிவும் மனிதனுக்குள் இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது, இந்த அறிவை விழித்து எழும்படிச் செய்வது தான் ஆசிரியருடைய வேலை.

* அனைத்து ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போதும் உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ, அப்போது நீ புத்தராகி விடுகிறாய்.

* உண்மை இல்லாதவற்றில் எச்சரிக்கையாக இருப்பதுடன், உண்மையில் பிடிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-



* அனைத்திலும் இறைவனை காண்பது நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.

* வாழும் காலம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.

* இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும் வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது. அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.

* பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்




* நம்பிக்கையும் நேர்மையும் பக்தியும் உன்னிடம் இருக்கும் வரை அனைத்தும் முன்னேற்றமடையும்.

* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரினையும் வழிபடுங்கள்.

* ஆசைக்கும் கோபத்திற்கும் அடிமையாய் இருந்தால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை ஒருவனால் உய்த்துணர முடியாது.

* எப்போதும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.

* சுயநலமே ஒழுக்கக்கேடு, சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணம்.

* உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள், நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளும் தாம். காலமெல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும், இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.

* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.

* கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

* அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

Online MysteRy

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்:-




* ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுவதையும், வெறுப்பதையும் விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் பூஜிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

* மனதுக்கு பிடித்த வேலையை செய்ய மூடனாலும் முடியும், எந்த வேலையையும் தன் மனதுக்குப் பிடித்ததாகச் செய்பவன் அறிவாளி.

* பிறர் நலனுக்காகச் சிறிது பணி செய்தாலும் உனக்குள் உள்ள சக்தி விழித்துக் கொள்ளும். பிறருக்காக சிறிது சிந்தித்தாலும், உன் உள்ளத்தில் சிங்கத்தின் பலம் வந்து சேரும்.

* பணத்தால் எதுவும் ஆவதில்லை, பெயரால், புகழால், கல்வியால் எதுவும் ஆவதில்லை, அன்பால் அனைத்தும் நிறைவேறும்.

* எவரையும் "நீ கெட்டவன்' என்று சொல்லாதே, "நீ நல்லவன் தான், இன்னும் நல்லவனாக ஆகு' என்று தான் கூற வேண்டும்.

* உன்னை நீயே வெறுக்காமலிருப்பது தான் முதற் கடமையாகும். முன்னேற்றமடைய முதலில் சுயநம்பிக்கை அவசியம் தேவை.