வான்கோழிகள் பற்றிய தகவல்கள்:-

வான்கோழி (Turkey) தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது ஃபாசியனிடே (Phasianidae) என்னும் குடும்பத்தில், மெலீங்கிரிடினே (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர்.
இது உருவத்தில் கோழியை விடப் பெரியதாகவும், சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. உருவத்தில் பெரியதாக இருப்பதால் இதனால் பறக்க முடியாது. வேகமாகவும் ஓடாது.
வான்கோழிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. காட்டிலும் கூட்டமாக வசிக்கும்.
வான்கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்துத் தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. இவை தங்களுக்கு தீங்கு (ஆபத்து) ஏற்படும் என்று உணர்ந்தால் உரத்து (சத்தமாக) ஒலியெழுப்பும்.