மனிதன் இறைவனின்
அற்புதப் படைப்பு
ரத்தம் எனும் மை கொண்டு
இறைவன் எழுதிய
புதுக்கவிதை மனிதன்
ஒரு சிறிய மூளைக்குள்
ஓராயிரம் குதிரைகளின் சக்தியைக்
கொண்டவன்
படைத்த இறைவனை விட உலகை
ஆண்டு அனுபவிப்பவன் மனிதன்
இத்தனை ஆற்றல் கொண்ட
மனிதன் சிறுவயது முதலே
சின்ன சின்ன தொட்டிகுள்
வேருடன் பிடுங்கி நடப்படுகிறான்
மேலே மேலே என்று
வளர வேட்கை கொண்ட
மனிதனின் சுயவளர்ச்சி
சுயவிருப்பம் கட்டுப்பாடு எனும்
கத்திரிக்கோல் கொண்டு
அவன் கிளைகள் வெட்டப்படுகின்றன
ஆகாயத்தில் சுதந்திரமாக
பறக்கும் வல்லமை கொண்ட
புறாவின் சிறகுகள்
கத்தரிக்கப்பட்டு கூண்டுக்குள்
அடைக்கப்படுவது போல
மனிதனும் அடைக்கப்படுகிறான்