Author Topic: சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி  (Read 502 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

புதிய சோள முத்துக்கள் - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், பொடித்த மிளகு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது? 

ப்ரஷ் மக்காளச் சோள முத்துக்களை (ஸ்வீட் கார்ன்) மிக்ஸியில் நல்ல கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின் இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும். பின் எண்ணெயை காயவைத்து பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து, சூடாக பரிமாறவும். இது ஒரு வின்டர் ஸ்பெஷல்.