Author Topic: அன்னம் பாயசம்  (Read 1052 times)

Offline kanmani

அன்னம் பாயசம்
« on: April 11, 2014, 11:11:21 PM »
என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி          - 2 கப்
பால்              - 4 கப்
தூளாக்கப்பட்ட வெல்லம் - 2 கப்
முந்திரி, திராட்சை      - 100 கிராம்
நெய்          - 3 டீஸ்பூன்
ஏலக்காய்          - கால் டீஸ்பூன்.
எப்படி செய்வது?

அரிசியை அலசி 15 நிமிடம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். சிறிது நெய்விட்டு முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். அரிசியில் சிறிதளவு தண்ணீர் விட்டு, பாலை ஊற்றி குழைய வேக வையுங்கள். நன்கு வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய் தூளைப்போடுங்கள். மீதமுள்ள நெய்யை விட்டு சர்க்கரை உருகி சாதத்தோடு கலக் குமாறு நன்கு கிளறி, முந்திரி, திராட்சையைப் போட்டு இறக்குங்கள். ஆந்திர தேசத்து அன்னம் பாயசம் ரெடி.