என்னென்ன தேவை?
மைதா மாவு - 2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1/2 கப்,
ஏதாவது பாட்டில் மூடி (சிறியது) - 1,
சாட் மசாலா - தூவுவதற்குத் தேவையான அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மைதா மாவுடன் உப்பு, சீரகம், 1/2 கப் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். பிறகு அதை மூடி ஒரு 15 நிமிடம் வைக்கவும். பிசைந்த மாவை சிறிது கனமான 1/3 சென்டிமீட்டர் அளவுக்கு தடியான ரொட்டியாக தேய்க்கவும். மாவை ஒரு சிறு மூடியில், பாதி மூடியாக சுற்றி வெட்டவும் (நிலா மாதிரி அல்லது முந்திரிப்பருப்பு போல). பிறகு உருட்டி மீண்டும் வெட்டவும். முந்திரிகளாக வெட்டியவற்றை மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுத்து, வடித்து, ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.