Author Topic: ~ ராகி வெஜிடபிள் புட்டு!! ~  (Read 623 times)

Offline MysteRy

ராகி வெஜிடபிள் புட்டு!!



''எங்கள் வீட்டில் தினமும் காலை உணவுக்கு சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துவதுதான்வழக்கம். தினை, கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரைவாலி, இவற்றில் ஏதாவது ஒன்றில் சாதம், கஞ்சி, பொங்கல், இட்லி, தோசை, பணியாரம் என்று ஏதாவது ஒரு டிபன் செய்வோம். இவற்றில் ராகி வெஜிடபிள் புட்டு செய்வதும் சுலபம்... ருசியும் ஆரோக்கியமும் அபாரம்' என்கிற சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த இந்திராணி தங்கவேல், புட்டு செய்யும் முறையை  விளக்கினார்.




தேவையானவைராகி மாவு - ஒன்றரை கப், பப்பாளி காய் துருவல், கேரட் துருவல், பீன்ஸ் துருவல் மூன்றும் சேர்த்து - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நல்லெண்ணெய் - 2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ராகி மாவுடன் காய்கறி துருவல் உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசிறினால் தண்ணீர் தேவைப்படாது. காய்கறிகளில் இருக்கும் நீரே போதுமானது. தேவைப்பட்டால் சிறிது நீரைத் தெளித்து பிசிறி, 10 நிமிடம் நன்கு ஊறவிடவும். பிறகு, புட்டு குழல் அல்லது புட்டு மேக்கரில் தேங்காய் துருவலை முதலில் சேர்க்கவும். பிறகு பிசறிய மாவை அடைத்து மிதமான தீயில் வேகவிட்டு 15நிமிடம் கழித்து எடுக்கவும்.  எண்ணெய் சேர்த்திருப்பதால் தொண்டையை அடைக்காது.  காய்கறிகள் கலந்திருப்பதால் சைடு-டிஷ் தேவையில்லை.  அப்படியே சாப்பிடலாம்.

சித்த மருத்துவர் கண்ணன்: வளரும் குழந்தைகளுக்கு ராகி புட்டு மிகவும் நல்லது. எலும்பு வளர்ச்சிக்கு உதவும். நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்கும். கார்போஹைட்ரேட், கால்சியம் அதிக அளவு இதில் உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடச் சிறந்த உணவு. உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும்.