Author Topic: ~ பணம் மற்றும் காசோலைகள் சம்பந்தமான எச்சரிக்கைகள்:-- ~  (Read 601 times)

Offline MysteRy

பணம் மற்றும் காசோலைகள் சம்பந்தமான எச்சரிக்கைகள்:--




1. உங்கள் காசோலைகள் புத்தகத்தை உங்களுக்கு மட்டும் தெரிந்த பத்திரமான இடத்தில் வைத்திருங்கள்.

2. வங்கியில் உங்களில் தொடர்பு விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.

3. உங்கள் வங்கி மாதாந்திர அறிக்கையை கவனமாக பார்த்திடுங்கள் அல்லது உங்கள் பணப்பரிமாற்றங்களை ஆன்லைன் அல்லது டெலிபோன் பேங்கிங் மூலம் பரிசோதித்திடுங்கள்.

4. நீங்கள் செய்யாத ஏதாவது ஒரு பரிமாற்றம் நடந்திருப்பதாகத் தோன்றினால் உடனடியாக வங்கியை உஷார்ப்படுத்துங்கள். அவர்கள் அது குறித்து விசாரிப்பார்க்ள்.

5. நீங்கள் பணம் கொடுக்க வேண்டிய நபரிடம் நேரடியாக காசோலையை வழங்காத வரை அதில் கையெழுத்திடாதீர்கள்.

6. நீங்கள் தபாலில் காசோலை அனுப்புகிறீர்கள் என்றால் அதன் ஓரத்தில் இரண்டு கோடுகள் இடவோ அல்லது அக்கவுன்ட் பேயீ என்று குறிப்பிட மறக்காதீர்கள்.

7. நீங்கள் ஒரு காசோலையை ரத்து செய்கிறீர்கள் என்றால் அதன் எண்ணையும், எம்.ஐ.சி.ஆர். கோடையும் அடித்தபின் கிழித்து போட்டுவிடுங்கள்.

8. ஒரு வங்கியில் நீங்கள் உங்கள் கணக்கை முடிக்கிறீர்கள் என்றால் பயன்படுத்தாத காசோலை இதழ்களை அழித்துவிடுங்கள்.

9. ஆன்லைன் பேமண்ட் மின்னணு பணம் செலுத்தும் வழிகளை பயன்படுத்தலாமா என்று பாருங்கள். அப்போதும் உங்கள் பாஸ்வேர்டு விஷயத்தில் கவனமாக இருங்கள்.

10. உங்களுக்கு கிடைக்கும் காசோலை சரியானதாக தோன்றாவிட்டால் வேறு வழியில் பணம் செலுத்தக் கோருங்கள்.