என்னென்ன தேவை?
கேரட் - 1,
குடைமிளகாய் - அரை,
முட்டை - 4,
பீன்ஸ் - 4.
தாளிக்க:
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்றரை,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப (வெள்ளைப்பூண்டு ஒரு பல், சிறிது இஞ்சி - விரும்பினால்).
மிளகுத்தூள், சீரகத் தூள், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை தனியாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து பீன்ஸை சேர்க்கவும். பீன்ஸ் வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். முட்டையை அடித்து ஊற்றி பக்குவமாக வதக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்க்கவும். தேவையெனில் தேங்காய்த் துருவல் கலக்கவும்.