Author Topic: அன்பெனும் மொழி பேசு  (Read 415 times)

Offline thamilan

அன்பெனும் மொழி பேசு
« on: March 01, 2014, 09:05:26 PM »
மனிதனை மனிதனாகியது மதம்
மனிதனை மதம்கொள்ள வைத்ததும்
அதே மதம்

கோவிலை இடித்து
ஆலயம் கட்டும் மூடரே
இறைவன் எத்தனை பேர்
உனக்கொருவன் எனக்கொருவனா

எந்த மதம் சொல்லிட்டு
சகமனிதனை பகை என
மதங்கள் போதிப்பது
மனிதநேயத்தை அல்லவா

மனிதனை நேசிப்பவனே
மகேசனை நேசிக்கிறான்
நதிகள் ஒன்றுகூடுவது கடலில்
மதங்கள் ஒன்றுகூடுவது அன்பில்

மதம் கொண்டு
மனிதநேயம் மறந்து
இறைவன் ஒருவனே என்ற
அடிப்படை அறிவற்றவனே
நீ எப்படி இறைவனனின் பக்கதனாவாய்

ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
அன்பெனும் மொழி பேசு
இறைவன் உன்னிடம் சரணடைவான்


« Last Edit: March 01, 2014, 09:13:49 PM by thamilan »

Offline NasRiYa

Re: அன்பெனும் மொழி பேசு
« Reply #1 on: March 02, 2014, 10:30:31 PM »
தனிமனித ஒழுக்கம் மேம்பட்டால் எல்லாம் சரியாகி விடும்...
நல்லதொரு கட்டுரைக்கு பாராட்டுக்கள்...

Offline thamilan

Re: அன்பெனும் மொழி பேசு
« Reply #2 on: March 03, 2014, 02:47:41 PM »
நஸ்ரிய நன்றி. காதலுக்கு அடுத்தபடி அதிகம் பவர் உள்ள வார்த்தை அன்பு. அன்பால் ஒரு எதிரியை கூட அடிபணிய வைத்திடலாம்.