« Reply #7 on: February 26, 2014, 11:03:43 AM »
அரைத்துவிட்ட கதம்ப சாம்பார்

தேவையானவை:
துவரம்பருப்பு - அரை கப், ஒரே அளவாக நீளவாக்கில் நறுக்கிய முருங்கைக்காய், கேரட், உருளைக்கிழங்கு, சௌசௌ, பீன்ஸ், நூல்கோல், கத்திரிக்காய் (சேர்த்து) - 2 கப், சாம்பார் வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, புளி - நெல்லிக்காய் அளவு, வெல்லம் - சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு - 8 டீஸ்பூன், தனியா - 12 டீஸ்பூன், துருவிய தேங்காய் - கால் கப், காய்ந்த மிளகாய் - 6.
தாளிக்க:
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன்.
செய்முறை:
துவரம்பருப்பை ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவிடவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் நீர் விட்டு அரைக்கவும். புளியைக் கரைத்து உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, சாம்பார் வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி சேர்க்கவும். காய்கள் வெந்ததும் (குழையக் கூடாது), வேகவைத்த பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும். எல்லாமாகச் சேர்த்து கொதித்து வந்ததும் இறக்கி வெல்லம் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
« Last Edit: February 26, 2014, 11:18:15 AM by MysteRy »

Logged