Author Topic: ~ சிவப்பு அரிசி புட்டு றார் ~  (Read 552 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிவப்பு அரிசி புட்டு றார்




தேவையானவை:
சிவப்பு அரிசி, சிவப்பு அவல் - தலா 100 கிராம், சர்க்கரை- 50 கிராம்,  துருவிய தேங்காய் - ஒரு கப், வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு - தலா 25 கிராம், ஏலக்காய் தூள் - சிறிதளவு.

செய்முறை:
கழுவி காயவைத்த சிவப்பு அரிசியுடன், அவல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுக் கலவையுடன் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து உப்பு கலந்த தண்ணீரைத் தெளித்து நன்கு வேகவைக்கவும். இதில் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் மற்றும் பொடித்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
சித்த மருத்துவர் ராதிகா சங்கரபாகம்:  சிவப்பு அரிசியில் மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் போன்ற தாது உப்புகள் மற்றும் வைட்டமின் - ஈ மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தினை குறைக்கக்கூடியது.  தினமும் ஏதாவது ஒரு வகையில் இந்த அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். இந்த புட்டை, சர்க்கரை சேர்க்காமல், சர்க்கரை நோயாளிகளுக்குக் கொடுக்கலாம். தசைகள், எலும்புகள், பற்கள் போன்றவற்றுக்கு வலு சேர்க்கக்கூடிய அத்தனைச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.