Author Topic: ~ மதிய சாப்பாடு: ~  (Read 715 times)

Offline MysteRy

~ மதிய சாப்பாடு: ~
« on: January 05, 2014, 10:36:51 AM »
கோயில் புளியோதரை



தேவையானவை:
அரிசி - ஒன்றரை டம்ளர், தண்ணீர் - 5 டம்ளர், காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 கைப்பிடி அளவு, சீரகம், மிளகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிய துண்டு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு கைப்பிடி அளவு, புளி - பெரிய‌ எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை தண்ணீர் விட்டுக் கழுவவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கும்போது உப்பு மற்றும் அரிசியை சேர்த்து வேக வைத்து      வடித்துக் கொள்ளுங்கள். சாதத்தில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசிறி, ஒரு தட்டில் பரப்பி ஆற வையுங்கள். கடாயில் சிறிதளவு நல்லெண்      ணெய்யை ஊற்றி, காய்ந்த மிளகாயைப் போட்டு பொரித்து எடுத்து, உடனே அதனை கைகளால் பொடித்து சாதத்தின் மேல் தூவிவிடுங்கள். சிறிதளவு எண்ணெயில் தனியா, கடலைப்பருப்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி செய்து, சாதத்தில் தூவிவிடுங்கள். புளியை திக்காக கரைத்து... இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், பெருங்காயம் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடி கனமான கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு வதக்கி, அதில் புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, இதனை சாதத்தில் கலந்து பிசிறிவிட்டால்... அற்புதமான டேஸ்ட்டில் கோயில் புளியோதரை வீட்டிலேயே ரெடியாகிவிடும். இதற்கு உருளைக்கிழங்கு தொக்கு தொட்டுச் சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ மதிய சாப்பாடு: ~
« Reply #1 on: January 05, 2014, 10:38:07 AM »
உருளைக்கிழங்கு தொக்கு



தேவையானவை:
உருளைக்கிழங்கு - கால் கிலோ, நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி - தலா 2 கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து தோலுரித்து ஆறாக நறுக்கிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளியை சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து தொக்கு போல வதக்குங்க‌ள். இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி இறக்கவும். புளியோதரைக்கு அருமையான சைட் டிஷ் ஆக இருக்கும் இந்த தொக்கு.