Author Topic: ~ ஃப்ரூட் பாயசம் ~  (Read 397 times)

Offline MysteRy

~ ஃப்ரூட் பாயசம் ~
« on: January 01, 2014, 10:08:56 PM »
ஃப்ரூட் பாயசம்



தேவையானவை:
பச்சை வாழைப்பழம் - 2, பேரீச்சம்பழம் - 6, வெல்லம் - 75 கிராம், மில்க் மெயிட் - 5 டீஸ்பூன், காய்ச்சிய பால் - அரை கப், பாதாம் பருப்பு - 10.

செய்முறை:
வெல்லத்தில் தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சவும். வாழைப்பழம் பேரீச்சம்பழத்தை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, சிறிது பால் விட்டு நன்றாக அரைக்கவும். மீதிப் பாலையும் சேர்த்து, மில்க் மெயிடை ஊற்றிக் கலந்துகொள்ளவும். பாதாம் பருப்பை ஒன்றிரண்டாகப் பொடித்துத் தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு இது.

பலன்கள்:
நாள்பட்ட நோய்களுக்குப் பின் ஏற்படும் உடல் தளர்ச்சியை நீக்கி, உடல் எடையை அதிகரிக்கும். உடலின் நச்சுத்தன்மையைப் போக்கும். இருபாலருக்கும் இல்லற இன்பம் அதிகரிக்கும்.