Author Topic: ~ மதிய சாப்பாடு:~  (Read 470 times)

Offline MysteRy

~ மதிய சாப்பாடு:~
« on: December 27, 2013, 04:11:23 PM »
வரகரிசி சாதம்



தேவையானவை:
வரகரிசி - ரெண்டு டம்ளர். தண்ணீர் - நாலரை டம்ளர்.

செய்முறை:
வரகரிசியை நன்கு கழுவி, தண்ணீர் விட்டு வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சேர்த்து சாப்பிட குழம்பும், கூட்டு வகையும் சொல்கிறேன்.

Offline MysteRy

Re: ~ மதிய சாப்பாடு:~
« Reply #1 on: December 27, 2013, 04:14:04 PM »
மொச்சைக் குழம்பு



தேவையானவை:
மொச்சை - ஒரு டம்ளர், கத்திரிக்காய் - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி அளவு, நறுக்கிய தக்காளி - 2 கைப்பிடி அளவு, புளி - எலுமிச்சம்பழம் அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, வெந்தயம் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் தண்ணீரை வடித்து, குக்கரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, மொச்சை மூழ்கும் அளவுக்குத் தண்ணீரை ஊற்றுங்கள். தீயை அதிகப்படுத்தி குக்கரில் மூன்று விசில் வந்ததும், அடுப்பை 'சிம்’மில் ஐந்து நிமிடம் வைத்து, பின்பு இறக்குங்கள்.
பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். அடுத்ததாக, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து ந‌ன்கு சுருள வதக்க வேண்டும். இனி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், வெந்த மொச்சை சேர்த்து நன்கு வதக்கி, நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடுங்கள். இப்போது புளியை ஒரு டம்ளர் நீரில் கரைத்து, குழம்பில் ஊற்றி வேகவிடுங்கள். நன்கு கொதித்து, சுண்டி வரும்போது இறக்குங்கள். வரகரிசி சாதத்துக்கு செம காம்பினேஷன் இந்தக் குழம்பு.

Offline MysteRy

Re: ~ மதிய சாப்பாடு:~
« Reply #2 on: December 27, 2013, 04:15:45 PM »
இதற்குக் கீரை மசியல் சிறந்த சைட் டிஷ்



தேவையானவை:
அரைக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - அரை டம்ளர், தக்காளி - 2, பெரிய வெங்காயம் - அரை துண்டு, பூண்டு - 4 பல், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
குக்கரில் துவரம்பருப்பு, கழுவிய கீரை, பூண்டு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்ததும், பருப்பு மத்து கொண்டு கீரையை நன்கு கடைந்து கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெந்த கீரை மசியலை சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கிவிடுங்கள்.