Author Topic: ~ தலை சுற்றல் நீங்க - எளிய இயற்கை மருத்துவம் :- ~  (Read 801 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227426
  • Total likes: 29056
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தலை சுற்றல் நீங்க - எளிய இயற்கை மருத்துவம் :-




தலை சுற்றல் வந்து விட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது . மாறாக எப்பொழுதும் படுத்து தான் இருக்க முடியும் . இப்படிப்பட்ட தலை சுற்றலுக்கு என்ன எளிய மருத்துவம் உள்ளது என்பதை நாம் காணலாம் .

கொத்தமல்லி , கசகசா , பருத்திவிதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டு சர்க்கரை சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வெந்நீர் குடிக்க தலைசுற்று , கிறுகிறுப்பு நீங்கும் .


அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்த அழுத்தம் இருப்பதாக் அர்த்தம் . முற்றிய இஞ்சியை நசுக்கி பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள் . தலைசுற்றும் நிற்க்கும். ப்ளட் பிரசரும் குறையும் .

ஏலக்காயை எடுத்து அதை இடித்து பனை வெல்லம் கலந்து சாப்பிட்டால் தலை சுற்று சுகமாகும் .


பித்தத்தினால் தலை சுற்றலா ..? ஒரு துண்டு இஞ்சி , 1 ஸ்பூன் சீரகம் , 1 ஸ்பூன் தனியா , இவற்றை மிக்சியில் நைசாக அரைத்து வடிகட்டி , லேசாக சுட வைத்து , தேன் அல்லது சர்க்கரை சேர்த்து 1 மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிட தலை சுற்றல் பிரச்சினை குணமாகும் .

வெளியில் போய் விட்டு வந்தால் கண்களை இருட்டி கொண்டு தளி சுற்றுவது போல இருக்கும் . கொட்டை புளி , ஒரு துண்டு வெல்லம் , ஒரு ஸ்பூன் சீரகம் மூன்றையும் ஒன்றாக நசுக்கி , உருட்டி , வாயில் அடக்கி கொண்டு , கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்து கொள்ளவும் . தலையணை கூடாது . இந்த ரசம் தொண்டையில் இறங்க இறங்க தலை சுற்றலும் குறையும்