எளிய இயகை வைத்தியம்:-

* துளசி நீர் மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டைப் புண்ணுக்குப் பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. சாப்பிட்டவுடனே பயனைக் காணலாம்.
* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் நூறு மில்லி தேங்காய் எண்ணெய்யை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
* சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் சொத்தை மறையும்.
* நெல்லி இலை, மருதோன்றி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து ஒரு சட்டியிலே போட்டு தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வரவேண்டும். வாய் வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.
* வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.
* கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். கறிவேப்பிலை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.
* வயிற்றிலுள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் உண்டாகிறது. இந்தக் குடல் புண்தான் அல்சர் எனப்படுவது. இந்த அல்சர் குணமாக வேண்டுமானால் பச்சை வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வரவேண்டும். குடல்களில் பழுதுபட்ட மெலிசான சவ்வுத் தோல்களைச் சீக்கிரமாக வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடுகிறது பச்சை வாழைப்பழம்.
* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.
* புதினா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.