21. பாவ் பாஜி
தேவையானவை: பாவ் பிரெட் (பேக்கரியில் கிடைக்கும்) - 2 பாக்கெட், பீன்ஸ் - கால் கிலோ, குடமிளகாய், தக்காளி - தலா 1, கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 2, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெண்ணெய் - 100 கிராம், கரம் மசாலாத் தூள், நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீன்ஸை நீளவாக்கில் மெல்லியதாகவும்... கேரட், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கவும். பீன்ஸ், கேரட்டுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து... குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் வேக வைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வதக்கிய தக்காளி, குடமிளகாய், கொத்தமல்சேர்த்து நன்றாக மசித்துப் பிசையவும். பாவ் பிரெட்டை நடுவில் வெட்டி, மசித்த கலவையை உள்ளே வைத்து, சிறிது வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்
.
பிரெட்டை, இந்த மசாலா கலவையைத் தொட்டும் சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.