Author Topic: ~ பலாப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:- ~  (Read 678 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பலாப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:-




பழங்களிலேயே பலாப்பழம் இனிப்பான சுவையை மட்டும் கொண்டிருப்பதில்லை. அதனுள் ஏகப்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், மக்னீசியம் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

1) நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் :-

பலாப்பழத்தில் நல்ல அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. எனவே ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியானது கிடைக்கும்.

2) புற்றுநோயை தடுக்கும் :-

இப்பழத்தில் வைட்டமின் சி-யுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களால் ஏற்படும் கொடிய நோயான புற்றுநோய் உண்டாவதை தடுக்கும்.

3) செரிமானம் :-

பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-அல்சர் பொருள், அல்சர் மற்றும் செரிமான பிரச்சனையை போக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை சரிசெய்யும்.

4) கண் மற்றும் சருமம் :-

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ என்னும் சக்தி வாய்ந்த சத்து கண்கள் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக பார்வைக் கோளாறு, மாலைக் கண் நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

5) எனர்ஜியைத் தரக்கூடியது :-

இதில் உள்ள இனிப்பைத் தரக்கூடிய ஃபுருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ், சுவையை மட்டுமின்றி, உடலில் எனர்ஜியையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் கொழுப்பு எதுவும் இல்லாததால், இது ஒரு ஆரோக்கியமான பழங்களுள் ஒன்றாக உள்ளது.

6) உயர் இரத்த அழுத்தம் :-

இப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மாரடைப்பு வருவதை தடுக்கும்.

7) ஆஸ்துமா :-

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலாப்பழத்தின் வேர் ஒரு நல்ல நிவாரணத்தைத் தரக்கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு இப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை பருகினால், ஆஸ்துமாவானது கட்டுப்படும்.

 எலும்புகளை வலுவாக்கும் :-

கால்சியம் சத்தை உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான மெக்னீசியம், பலாப்பழத்தில் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகளில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல், எலும்புகள் வலுவோடு இருக்கும்.

9) இரத்த சோகை :-

பலாப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்து, இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.

10) தைராய்டு :-

தைராய்டு சுரப்பியை சீராக இயக்குவதற்கு காப்பர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டால், தைராய்டை சீராக வைக்கலாம்.