Author Topic: ~ குழந்தைகளுக்கு வெளிப்பொருட்கள் தொண்டை,வயறுகளில் சிக்கினால் அதை நீக்க முதலுதவி:  (Read 466 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகளுக்கு வெளிப்பொருட்கள் தொண்டை,வயறுகளில் சிக்கினால் அதை நீக்க முதலுதவி:-




குழந்தைகள் நாணயங்கள், சிறு சிறு பொம்மைகள் போன்றவற்றை விழுங்க முயலும் போதும் மூச்சுத் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு. இது போன்ற சமயங்களில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மீட்பது சாத்தியமே.

* மூச்சுத் திணறல் - சில அறிகுறிகள் சாப்பிடும்பொழுது பாதிப்பு ஏற்படுதல் கழுத்தைப் பிடித்துக்கொள்ளுதல் சிறிய அளவிலான மூச்சுத் திணறலுக்கும் பெரிய அளவிலான மூச்சுத் திணறலுக்கும் உள்ள வேறுபாடுகள் சிறிய அளவு பெரிய அளவு உங்களுக்கு மூச்சுத் திணறுகிறதா என்று கேட்டால், ஆம் என்று பதில் அளிப்பார்.

* அவரால் பேச முடியும், இரும முடியும், மூச்சு விட முடியும். உங்களுக்கு மூச்சுத்திணறுகிறதா என்று கேட்டால், அவரால் பதிலளிக்க முடியாது. அல்லது தலையை அசைத்து பதிலளிப்பார் ஒழங்கற்ற முறையில் சுவாசிப்பார் இடைஞ்சல்கள் இருக்கும்.

* மயக்க நிலைக்குப் போகலாம். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் (1 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொருத்தக் கூடிய சில வழிமுறைகள்) நிலைமையின் தீவிரத்தை ஆராயுங்கள்.

* தீவிர சுவாசத் தடை (பயனற்ற இருமல்) சிறிய அளவிலான சுவாசத் தடை (பயனளிக்கும் இருமல்) மயக்கநிலையில் இருந்தால் (சிறிசிஸி-ஐ ஆரம்பிக்கவும் நினைவோடு இருந்தால் பின்பக்கமாக 5 முறை தட்டலாம்.

* 5 முறை அடி வயிற்றை அழுத்தலாம். நிலைமை சீராகும் வரை இருமுவதற்கு அனுமதிக்கலாம். வெளிப்புற பொருள்கள் உட்புகுந்துவிட்டால் கடைபிடிக்க வேண்டிய சிகிச்சை முறை.

* சிறிய அளவிலான சுவாசத் தடை ஏற்படும் பட்சத்தில் இருமுவதற்கு அனுமதியுங்கள் பெரிய அளவிலான சுவதசத் தடை ஏற்படும் பட்சத்தில் ஐந்து முறை முதுகுப்புறத்தில் தட்டிக் கொடுள்ளலாம்.

* அவருக்குப் பக்கவாட்டில் அல்லது பின்புறமாக நிற்கலாம். அவரது மார்பை தாங்கிப் பிடித்தபடி அவரை முன்பக்கமாக நகர்த்தலாம்.

* அப்போதுதான் உள்ளே சிக்கிக் கொண்ட பொருள் வாய் வழியாக வெளியேறுவதற்குச் சுலபமாக இருக்கும் குதி கையால் அவரது தோள்பட்டையின் மத்தியில் ஐந்து முறை அழுத்தமாக அடிக்கலாம்.

* ஒவ்வொரு முறை அடிக்கும்போதும், அவரது சுவாசம் சீராகிவிட்டதா என்று பார்க்கவும். ஐந்து முறை அவசியம் அடித்தாக வேண்டும் என்று அவசியமில்லை. தொண்டையில் சிக்கிக் கொண்ட பொருள் வெளியே வரவேண்டும்.

* அதுதான் முக்கியம். ஐந்து முறை அடித்தும் பயனில்லை என்றால், அடி வயிற்றை அழுத்தலாம். அவரது பின்பக்கம் நின்றுகொண்டு இரு கைகளாலும் அவரை அணைத்துக் கொள்வதைப் போல் பிடித்து அடி வயிற்றை அழுத்தலாம்.

இந்த முதலுதவி முறைகளிலேயே குணமாகாமல் இருந்தால், மருத்துவரிடம் அழைத்துச்செல்வது உத்தமம்.