Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம் (Sour sop fruit)
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம் (Sour sop fruit) (Read 537 times)
sameera
Sr. Member
Posts: 346
Total likes: 42
Karma: +0/-0
Gender:
புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம் (Sour sop fruit)
«
on:
November 07, 2013, 11:29:40 AM »
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்...துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒருஅற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.
புற்று நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான வாசனையுடையதாக இருக்கும்.
பக்கவிளைவுகள் இல்லை
காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான ‘கீமோதெரபி’ போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.
இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம் (Sour sop fruit)