Author Topic: ~ மழைக்காலத்தில் பரவும் நோய்கள் என்ன? ~  (Read 441 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மழைக்காலத்தில் பரவும் நோய்கள் என்ன?




கடந்த சில நாட்களாக கன மழை பெய்கிறது. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதுபோன்ற திடீர் பருவநிலை மாற்றத்தால் தொற்று நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் கொசுக்கள் மற்றும் ஈக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். குறிப்பாக மழைகால நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் இந்த காலகட்டத்தில் அதிகளவில் பரவும்.

மழைகாலங்களில் கொசுக்களினால் அதிகளவில் நோய்கள் பரவுவதை பற்றியும் மழைகால நோய்கள் மற்றும் தடுப்புமுறை குறித்தும் டாக்டர் இளங்கோ ஆலாசனை கூறிகிறார்.. மழைக்காலங்களில் அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் நெருக்கத்தினாலும், காற்று தாராளமாக செல்ல முடியாத அடுக்கான வீடுகள், கட்டிடங்கள், போன்ற வீடுகளில் வீட்டை சுற்றி சாக்கடை, தண்ணீர் தேங்குவதாலும் கொசு, ஈக்கள் போன்றவை அதிகளவில் உற்பத்தியாகும். இதனால் நோய்கள் அதிகளவு பரவ வாய்ப்புள்ளது.

மழை காலத்தில் பரவும் நோய்கள் என்னென்ன?

மழைக்காலத்தில் கொசுவின் மூலம் நோய்கள் அதிகம் பரவுகிறது. கொசுவின் மூலம் பரவக்கூடிய நோய்களான டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, எலிக்காய்ச்சல். மேலும் காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்றவை தண்ணீர், ஈக்கள், உணவு மூலம் பரவுகின்றது. இந்த நோய்கள் தொற்றாமல் இருக்க நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மழைகால நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள சுத்தமான சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. காய்ச்சிய நீரை பருக வேண்டும், தெருவோர கடைகளில் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கை, கால் சுத்தம் அவசியம்.

வெளியில் சென்று வந்ததும் முதலில் முகத்திற்கு நன்கு சோப்பு போட்டு கழுக வேண்டும். இல்லையெனில் கைகளில் தொற்றியிருக்கும் கிருமிகள் நமது முகத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி விடும். தெருவில் நடந்து செல்லும் போது தண்ணீரில் மிதித்து நடக்கும் படியாகிவிடும். எனவே வீட்டிற்கு வந்ததும் முதலில் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். நமது கால்கள் மூலம் எளிதாக கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும் அளவுக்கு மிகவும் மிருதுவானது. ஆதலால் கால்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

தண்ணீரை காய்ச்சி குடிப்பது சிறந்தது

மழைகாலத்தில் பரவும் நோய்களுக்கு அடிப்படையாக இருப்பது தண்ணீரே. எனவே பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை காயச்சி பருகுவதால் கிருமிகள் ஏதேனும் இருந்தால் அவை அளிக்கப்பட்டு விடும். கேன்களில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் மற்றும் பாட்டில் தண்ணீர் குடிப்பவர்கள் கேன்களில் அரசு முத்திரையான ஐ.எஸ்.ஐ. இருக்கிறதா என்பதை பரிசோதித்து வாங்க வேண்டும். எந்த தண்ணீராக இருந்தாலும், அதை காய்ச்சி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் மழைக்கால நோயிலிருந்து தப்பிக்கவும் சிறந்த வழி.