பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
தேங்காய் துருவல் - அரை கப்
கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
இறால் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 9
பச்சை மிளகாய் - 5
உப்பு - அரை தேக்கரண்டி
கறி மசாலா - அரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
சோம்பு தூள் - முக்கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். தேங்காய் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ளப் பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய தக்காளியைப் போட்டு பிசைந்துவிட்டு, பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், மல்லித் தூள், கறி மசாலா, அரை மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, மீதியுள்ள இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயத்துடன் மிளகாய் தூள் ஒன்றாகக் கலந்ததும், கரைத்து வைத்திருக்கும் குழம்பை ஊற்றவும்.
குழம்பை நன்கு கிளறிவிட்டு, அதில் அரைத்து வைத்திருக்கும் இறால் கலவையை உருண்டைகளாக உருட்டிப் போடவும்.
பிறகு குழம்பை ஒரு தட்டு போட்டு மூடி வைத்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து பொங்கி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சுவையான இறால் குப்பத்தா தயார்.