Author Topic: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~  (Read 2357 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #15 on: October 24, 2013, 05:57:05 PM »
ரோஸ் ஜிலேபி



தேவையானவை:
மைதா மாவு - 100 கிராம், சோள மாவு - 25 கிராம், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், கடைந்த தயிர் - 50 கிராம், சர்க்கரை - ஒரு கப், ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், ஆரஞ்சு அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - தேவையான அளவு, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 250 கிராம்.

செய்முறை:
சர்க்கரையில் அரை கப் நீர் சேர்த்து, சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கம்பிப் பதம் வந்தபின் இறக்கி, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு தயிர், சோடா உப்பு, சிறிதளவு ஃபுட் கலர் ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து இட்லி மாவு போல் கரைக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய துளையிட்டு, சூடான எண்ணெயில் சிறிய வட்டமாக 3 அல்லது 4 முறை சுற்றி பிழிந்துவிட்டு பொரித்தெடுக்கவும். இதை சர்க்கரை பாகில் முக்கி எடுத்து, ஒன்றின் மீது ஒன்று படாதவாறு தட்டில் வைக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #16 on: October 24, 2013, 05:58:14 PM »
ஓமவல்லி துளசி லேகியம்



தேவையானவை:
ஓமவல்லி இலை - 10, துளசி இலைகள், - 10, இஞ்சி - ஓர் அங்குல நீள துண்டு (சுத்தம் செய்து, தோல் நீக்கவும்), லவங்கம் - 3, நெய் - 2 டீஸ்பூன், மிளகு - 10, தேன் - 4 டீஸ்பூன்.

செய்முறை:
மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடிக்கவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய்யை விட்டு சூடாக்கி... அரைத்த விழுது, பொடித்த பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆற வைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு உதவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #17 on: October 24, 2013, 05:59:24 PM »
சுருள் போளி



தேவையானவை:
மைதா - ஒரு கப்,  - கடலை மாவு - ஒரு கப், சர்க்கரை (பொடித்தது) - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் - கால் கப், துருவிய கலர் கொப்பரை - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
கடலை மாவை நெய்யில் சிவக்க வறுத்து... பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து பூரணம் தயாரிக்கவும். மைதாவை உப்பு, தேவையான நீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து மெல்லிய, சற்றே பெரிய பூரி போல் இடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை சிறுதீயில் வைத்து, பூரிபோல் இட்டு வைத்ததை போட்டு பாதி வேகவிட்டு (மொறுமொறு என்று ஆகிவிடாமல்) எடுத்து, சூட்டோடு இருக்கும்போதே அதில் பூரணம் தூவி, உடனே பாய் போல் சுருட்டி, மேலே கலர் கொப்பரை தூவவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #18 on: October 24, 2013, 06:00:41 PM »
பனீர் ஜாங்கிரி



தேவையானவை:
முழு உளுத்தம்பருப்பு - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், துருவிய பனீர் - 100 கிராம், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் எசன்ஸ் - 2 சொட்டு, ஃபுட் கலர் (கேசரி (அ) மஞ்சள்) - தேவையான அளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 200 கிராம்.

செய்முறை:
சர்க்கரையுடன்  ஃபுட் கலர், சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, ஏலக்காய் எசன்ஸ் சேர்த்து வைக்கவும். உளுத்தம்பருப்பு, அரிசியை சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து... நன்கு கெட்டியாக, மையாக அரைத்து  சிறிதளவு கலர் சேர்க்கவும். நெய் - எண்ணெயை கடாயில் சேர்த்து சூடாக்கவும். பால் கவரில் மாவை நிரப்பி, ஒரு மூலையில் சிறிய ஓட்டை போட்டு, கொதிக்கும் நெய் - எண்ணெயில் ஜாங்கிரிகளாக பிழிந்து, பொரித்தெடுக்கவும். அதை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து, பாகு உலரும் முன் துருவிய பனீர் சேர்க்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #19 on: October 24, 2013, 06:01:50 PM »
கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ்



தேவையானவை:
முழு வேர்க்கடலை (வறுத்தது) - 200 கிராம், கடலை மாவு - 50 கிராம், சோள மாவு - 2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:
அனைத்து பொருட்களையும் சிறிதளவு நீர் விட்டு பிசிறி, சூடான எண்ணெயில் உதிர்த்தாற்போல் போட்டு எடுக்கவும்.
குறிப்பு: கடலை மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #20 on: October 24, 2013, 06:02:59 PM »
ஆரஞ்சு கேக்



தேவையானவை:
மைதா - 100 கிராம், கமலா ஆரஞ்சு சாறு - 50 மில்லி, சர்க்கரை - 100 கிராம், நெய் - 50 கிராம், ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிதளவு.

செய்முறை:
நெய்யை உருக்கி அதனுடன் மைதா, ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையில் கமலா ஆரஞ்சு சாறு சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மைதா கலவையை சேர்த்துக் கிளறவும். கலவை இறுகும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, சற்றே ஆறியபின் வில்லைகள் போடவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #21 on: October 24, 2013, 06:04:05 PM »
பாதாம் மைசூர் பாக்



தேவையானவை:
பாதாம் - 4 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 100 கிராம், நெய் - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம்

செய்முறை:
பாதாம் பருப்பை தோல் நீக்கி மிக்ஸியில் தூள் செய்யவும். இதை கடலை மாவுடன் நன்கு கலக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையோடு சிறிதளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். வேறொரு கடாயில் நெய்யை உருகவிடவும். சர்க்கரைப் பாகு ஒற்றை கம்பி பதம் வரும்போது பாதாம் - கடலை மாவு கலவை சிறிதளவு, சூடான நெய் சிறிதளவு என்று மாற்றி மாற்றி சேர்த்து... கலவை ஒட்டாமல் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, விருப்பம்போல் வில்லைகள் போடவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #22 on: October 24, 2013, 06:05:17 PM »
மிளகு மைதா சிப்ஸ்



தேவையானவை:
மைதா - 2 கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
மைதாவுடன் உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு எண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து, கனமான பூரிகளாக தேய்க்கவும். இதை டைமண்ட், சதுரம் என்று விரும்பிய வடிவில் 'கட்’ செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #23 on: October 24, 2013, 06:06:26 PM »
பனீர் குலோப் ஜாமூன்



தேவையானவை:
துருவிய பனீர் - 50 கிராம், மைதா - 100 கிராம், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 200 கிராம், எண்ணெய் - 200 கிராம்.

செய்முறை:
சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். மைதாவுடன் பனீர், ஆப்பசோடா, சிறிதளவு நீர் சேர்த்து மிகவும் மிருதுவாக பிசைந்து (அடித்து / அழுத்தி பிசையக்கூடாது), சிறிய கோலி உருண்டைகள் போல் உருட்டவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்த உருண்டை களைப் பொரித்தெடுத்து பாகில் போட்டு, கொஞ்சம் ஊறிய பின் சாப் பிடக் கொடுக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #24 on: October 24, 2013, 06:07:45 PM »
இஞ்சி எள் ரிப்பன் பக்கோடா



தேவையானவை:
அரிசி மாவு (களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்தது) - 150 கிராம், கடலை மாவு - 50 கிராம், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:
எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இஞ்சிச் சாறு அஜீரணத்தை தடுக்கும் குணமுள்ளது.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #25 on: October 24, 2013, 06:09:00 PM »
ஸ்வீட் காராசேவ்



தேவையானவை:
கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பொடித்த மிளகு - அரை டீஸ்பூன், சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு, பெருங் காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, சிறிதளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கவும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி காராசேவ் தட்டு (அ) பெரிய கண் ணுள்ள கேரட் துருவி கொண்டு காயும் எண்ணெயில் நன்கு தேய்த்து போட்டு, காராசேவுகளாக பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சர்க்கரை கரைந்து பாகு வரும்போது தொடர்ந்து வேகமாக கிளற, சர்க்கரை பனிபோல் பூத்து வரும். அப்போது பொரித்த காராசேவ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நன்கு புரட்ட... ஸ்வீட் காராசேவ் தயார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #26 on: October 24, 2013, 06:10:16 PM »
மைதா கோகோ கேக்



தேவையானவை:
மைதா - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், நெய் - 100 கிராம், கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
வாணலியில் நெய்யை உருக்கி மைதா சேர்த்து இட்லி மாவு போன்ற பதம் வந்ததும் இறக்கவும். மற்றொரு வாணலியில் சர்க்கரை, கோகோ பவுடர் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் மைதா கலவையை சேர்த்து நன்கு கிளறி கெட்டியாகும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியபின் துண்டுகள் போடவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #27 on: October 24, 2013, 06:11:23 PM »
வெல்ல திரட்டுப் பால்



தேவையானவை:
 ஃபுல் க்ரீம் பால் - ஒரு லிட்டர், பொடித்த பாகு வெல்லம் - 200 கிராம், நெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பில் ஏற்றி... பால் நன்கு சுண்டி, கெட்டி பதம் வரும் வரை அடிப்பிடிக்காதபடி கிளறி நன்றாக காய்ச்சவும். இதனுடன் துருவிய வெல்லம், நெய் சேர்த்து மணல் மணலாக வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
வெல்லம் சேர்ப்பதனால், நிறைய இரும்புச் சத்து உடலில் சேரும். சுவை... சொல்லி மாளாது!

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #28 on: October 24, 2013, 06:12:36 PM »
பொட்டேட்டோ  ஃபிங்கர் ஃப்ரை ஸ்நாக்ஸ்



தேவையானவை:
ஊட்டி உருளைக்கிழங்கு (செம்மண்ணில் விளைந்தது. கிழங்கில் செம்மண் ஒட்டியிருக்கும்) - 250 கிராம், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், முந்திரி - 25 கிராம், உலர் திராட்சை - 25 கிராம், பாதாம் - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், எண் ணெய் - 200 கிராம்

செய்முறை:
உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி, தோல் நீக்கி, பெரிய துளையுள்ள கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். அதை சிறிது நேரம் உலர விட்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை, வறுத்த பாதாம், வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள், சர்க் கரை ஆகியவற்றை பொரித்த உருளை யுடன் சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை ஸ்வீட் - காரம் ~
« Reply #29 on: October 24, 2013, 06:13:44 PM »
ஆப்பிள் ரவா கேக்



தேவையானவை:
துருவிய ஆப்பிள் - ஒரு கப், ரவை - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், நெய் - தேவையான அளவு, கிரீன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.

செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி, ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர், ரவையுடன் ஆப்பிள், சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.