Author Topic: ~ உணவை மென்று சாப்பிடுவது நல்லது:- ~  (Read 480 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உணவை மென்று சாப்பிடுவது நல்லது:-



இயற்கை உணவானாலும் சரி, வெந்த உணவாக இருந்தாலும் சரி, மிகக்குறைவாக எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கூழாக சாப்பிடுவது நம் வயிற்றுக்கு நல்லது. இதனால் எளிதில் ஜீரணமாகி பசியை அதிகமாக தூண்டுகிறது.

நம் உடலானது அணுக்களின் கூட்டம் என்று நமக்குத் தெரியும். மனித உடலில் சராசரி 60 லட்சம் கோடி செல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் ஓர் உயிர் என்று சொல்லலாம். அத்தனைக்கும் உணவு சென்றடைய வேண்டும். செல் என்பதே கண்ணுக்குத் தெரியாதது. இவ்வாறு இருக்க அதன் உணவின் அளவு அதையும் விட சிறிதாகத் தானே இருக்க முடியும். எனவே நாம் எடுக்கும் உணவு வயிற்றுக்குள் சென்றடைந்து ஜீரணமாகி, இரத்தமாகி இதயத்திற்குச் சென்று அங்கிருந்து தமனிகள் மூலம் உடலின் பல பாகங்களுக்குச் சென்று இறுதியில் நீராவி போன்று பல இடங்களிலும் பரவி செல்களை அடைகிறது. எனவே நாம் உட்கொள்ளும் உணவை நன்கு மென்று சாப்பிட்டால் அப்புறம் என்ன 100 வயது தான்.