Author Topic: ~ எக்ஸிமா என‌ப்படு‌ம் சொறி சிரங்கு நோய் பற்றிய தகவல்கள்:- ~  (Read 685 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எக்ஸிமா என‌ப்படு‌ம் சொறி சிரங்கு நோய் பற்றிய தகவல்கள்:-




ம‌னித உட‌லி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய உறு‌ப்பு எ‌ன்றா‌ல் அது சரும‌ம்தா‌ன். அதாவது தோ‌ல். தோ‌ல் எ‌ன்பது உடலை மூடி‌யிரு‌க்கு‌ம் உறு‌ப்பு ம‌ட்டும‌ல்ல.. அது ப‌ல்வேறு வகையான ப‌ணிகளை‌ச் செ‌‌ய்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. அ‌ப்படி‌ப்ப‌ட்ட சரும‌ம் எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அ‌தி‌ல் ஒ‌ன்றுதா‌ன் சரும ‌வியா‌திக‌ள். எக்ஸிமா என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய். தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும். மிகவும் அரிக்கும் தன்மை இருக்கும்.

தோலில் ஏற்படும் மிகை உணர்வுத்தன்மை அல்லது ஒவ்வாமை, தோல் தடிமனாகும் தன்மையை ஏற்படுத்தும். தோல் தடிமனாகுதலினால் அப்பகுதி சிவப்பாக மாறி, மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்

தோல் காய்ந்து (வரண்டு), அரிப்புடன் கூடிய சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான செதில்கள் போன்ற தடிப்பு காணப்படும். வெப்பம், மனஅழுத்தம், கவலை மற்றும் சொறிவதனால் ஏற்படும் புண் காயங்கள் அரிப்பை அதிகரிக்கும்.

குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும் வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களும் பாதிக்கப்பட அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு.

இவ்வகை வட்டவடிவுள்ள புண்கள் கால்முட்டியின் பின்புறம், முழங்கை முட்டியின் மடியும் பகுதி, கைமணிக்கட்டு, கழுத்துப்பகுதி, கால் மணிக்கட்டு மற்றும் பாதத்தில் ஏற்படும். பிறந்த குழந்தைகளின் முகத்தில், க‌ன்னங்களில் சிவப்பு நிற கொப்புளங்கள் போல் தோன்றும்.
எக்ஸிமா பொதுவாக ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஏற்படும் சரும ‌வியா‌தியாகு‌ம். குடும்ப வழியில், எக்ஸிமா மற்றும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை உடையோர்க்கும் இ‌ந்த ‌வியா‌தி ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ண்டு.

எ‌க்‌ஸிமா ஏ‌ற்பட நிறைய காரணங்கள் உண்டு. அவை நபருக்கு நபர் வேறுபடும்.

சுற்றுசூழல் காரணிகள் அதாவது குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள் குளோரின் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு.

மன அழத்தமும் சரும நோ‌ய் ஏ‌ற்பட காரணமா‌கிறது.

வறட்சியான த‌ட்பவெ‌ப்ப நிலை மற்றும் தோல் எ‌ப்போது‌ம் வறண்டு காணப்படுதலும் நிலைமையை மோசமாக்கும்

இதுபோ‌ன்ற காரண‌ங்களை மா‌ற்‌றி, சரும‌த்தை பாதுகா‌ப்பத‌ன் மூல‌ம், இ‌ந்த நோ‌யி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்கலா‌ம் அ‌ல்லது நோ‌யி‌ன் ‌தீ‌விர‌த்‌தி‌ல் இரு‌ந்து த‌ப்‌பலா‌ம்.

இ‌ந்த நோ‌யினா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புகளாவன :

இந்நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை

வடுக்கள் மற்றும் தழும்புகள் ஏற்படும்

பாதிக்கப்பட்ட பகுதியில் தடிமன் ஏற்படுதலினால் சரும‌த்‌தி‌ன் நிறம் குறைதல் போ‌ன்ற ‌பி‌ன் ‌விளைவுக‌ள் ஏ‌ற்படலா‌ம்.

எ‌க்‌ஸிமா நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் :

பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சலூட்டும் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் இந்நோயின் ‌தீ‌விர‌த்தை குறை‌க்கலா‌ம்.

பாதிக்கப்பட்ட பகுதி‌யி‌ல் சொறிவதை தவிர்க்கவும்

சோப்பு உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும். அதை ‌விடு‌த்து இய‌ற்கையான முறை‌யி‌ல் பா‌சி‌ப்பயறு போ‌ன்றவ‌ற்றை‌‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

நோ‌ய் ‌தீ‌விரமாவத‌ற்கு மு‌ன்பு உ‌ரிய மரு‌த்துவ‌ரிட‌ம் ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம்.

நீ‌ங்க‌ள் பய‌ன்படு‌த்‌திய ஆடைக‌ள், பொரு‌ட்களை ம‌ற்றவ‌ர்க‌ள் பய‌ன்படு‌த்துவ‌தி‌ல் இரு‌ந்து தடு‌க்க வே‌ண்டு‌ம்.

எ‌க்‌ஸிமா எ‌ன்பது மோசமான நோ‌ய் அ‌ல்ல. எ‌னினு‌ம், அத‌ன் பா‌தி‌ப்பு ஒ‌வ்வொரு நபரு‌க்கு‌ம் வேறுபடு‌ம். எனவே, ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌க் கொடு‌த்த மரு‌ந்தையோ, அதுபோ‌ன்ற ‌வியா‌தி தா‌ன் எ‌ன்று ‌நீ‌ங்களாக எ‌ண்‌ணி‌க் கொ‌ண்டு வேறு ஒருவரு‌க்கு கொடு‌த்த மா‌த்‌திரைகளையோ சா‌ப்‌பிட‌க் கூடாது