என்னவனே
இந்த பிரபஞ்சத்தின்
ஏதோ ஒரு சிறு புள்ளியில்
எனது வாசம்
இடங்களுக்கான தூரம்
தான் அதிகமே
தவிர
என் நினைவுகளுக்கு
தூரம் இல்லை
எபோழுதும் உன்னை
சுற்றியே பட்டாம் பூச்சியாய்
வட்டம் இடும்
நீ என்னை வேண்டாம்
என்று பிரிந்து சென்றாலும்
நான் வாழும் வரை
என் சுவாசமாக
கலந்திருப்பாய்