Author Topic: ~ வேலை.நெட் – வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தரும் புதிய தளம் ~  (Read 16060 times)

Offline MysteRy

வேலை.நெட் – வேலைவாய்ப்பு செய்திகளை தமிழில் தரும் புதிய தளம்




இன்றைக்கு இணையத்தில் அதிகம் பேர் உலாவும் தளம் என்றால் அது வேலைவாய்ப்பு செய்திகளை தரும் தளங்கள் தான். அதிலும் குறிப்பாக தற்போது கல்லூரியில் இருக்கும் மாணவர்கள் மற்றும் சமீபத்தில் படித்து முடித்தவர்கள். இதற்கான தளங்கள் அனைத்துமே பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. தமிழில் கிட்டத்தட்ட தளங்களே இல்லை என்று சொல்லலாம்.

அந்த குறையை போக்க துவங்கப்பட்ட தளம் தான் “வேலை.நெட்”. நித்தமும் வரும் அரசு, தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்வதே இந்த தளத்தின் நோக்கம். முழுக்க முழுக்க தமிழில் தர முடியாது என்று தெரிந்த போதிலும், முடிந்தவரை தமிழில் தருவோம் என்று வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்து வருகிறோம்.

பகிரும் தகவல்கள் உண்மையானவையா என்று சோதித்த பின்னரே பகிரப்படுகின்றன. தற்போதைக்கு வேலைவாய்ப்பு செய்திகளோடு தொடங்கப்பட்டுள்ள இந்த தளத்தில் விரைவில் கல்வி குறித்த தகவல்களையும் பகிர முடிவு செய்துள்ளோம்.

தளத்தின் முகவரி