Author Topic: ~ வரப்புயர..! ~  (Read 778 times)

Offline MysteRy

~ வரப்புயர..! ~
« on: September 12, 2013, 11:39:57 AM »
வரப்புயர..!




பெண்கவி ஔவையார் மிகவும் மதிநுட்பம் மிக்கவர்.தன்னலம் கருதாமல் சேவை செய்யக்கூடியவர்.சோழர்கால அரசர்களுக்கு ஔவையாரை ரொம்பபிடிக்கும்.அரசு விழாக்களில் பங்கேற்க எப்பொழுதும் ஔவையாருக்கு தனி அழைப்பு வந்துவிடும்.

குலோத்துங்க மன்னன் முடிசூட்டுவிழாவில் ஔவையாரும் பங்கேற்றார். பல அமைச்சர்களும், புலவர்களும் அரசரை வாயார வாழ்த்தி மகிழ்ந்தனர். அப்பொழுது ஔவையார் மன்னனை வாழ்த்திப் பாட எழுந்தார். மன்னரும், அவையோரும் ஔவயார் என்ன வாழ்த்திப் பாடப்போகிறர் என ஆவலுடன் பார்த்துகொண்டிருந்தனர். அப்பொது ஔவையார் "வரப்புயர" எனச்சொல்லி விட்டு அமர்ந்துவிட்டார்.

இதனைகேட்ட யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.ஔவையாரே எழுந்து இதற்கு பின் வருமாறு விளக்கம் கூறினார்.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக விளக்குகிறார்.

ஆனால் இப்பொழுது இருக்கும் விவாசாயிகளின் நிலைமையும்,அராசாங்கத்தின் கொள்கையும் எனக்கு ஏமாற்றத்தையே தருகிறது.விவசாய பொருட்களுக்கு கட்டுபடியான விலை எந்த அரசும் நிர்ணயிக்கவில்லை மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டதால் விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயம் நலிவடைந்துவருகிறது.விவசாயத்தின் நலிவடைந்த தன்மையும்,விவசாயிகளின் கடன் தொல்லையும்,ரியல் எஸ்டேட் காரகளுக்கும்,ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அராசியல்வாதிகளுக்கும் தான் ஊக்கத்தை தருகிற்து.

Arul

  • Guest
Re: ~ வரப்புயர..! ~
« Reply #1 on: September 12, 2013, 01:33:32 PM »
aam ithu mutrilum unmai

vivasaayangalai alithu unavuku pichai edukum kaalam vehu tholaivil illai.....mikavum vethanaiyana visayam
« Last Edit: September 12, 2013, 02:04:20 PM by அருள் »

Offline MysteRy

Re: ~ வரப்புயர..! ~
« Reply #2 on: September 12, 2013, 02:20:43 PM »
Nandri Arul Ungal Karuthukku  :) :)