கெட்டியான இட்லி மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பில்லை - 4 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் - 1 துண்டு
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லியினை பொடியாக வெட்டி கொள்ளவும்.
தேங்காயினை சிறிய சிறிய பல்லாக அரிந்து கொள்ளவும்.
இப்பொழுது அதனைத்து பொருட்களையும் இட்லி மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து இந்த கலவையினை ஒரு குழி கரண்டியில் எடுத்து எண்ணெயில் மெதுவாக போடவும்.
ஒரே சமயத்தில் கடாயில் எண்ணெயின் அளவினை பொருத்து 4 - 5 போண்டாகள் சுட்டு எடுக்கவும்.
இப்பொழுது சுவையான இட்லி மாவு போண்டா ரெடி. இத்துடன் ஏதேனும் சட்னி சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
Note:
இட்லி மாவு மீந்துவிட்டால் நாம் அதனை தோசையாகவோ அல்லது ஊத்தப்பமகாவோ செய்வோம். இப்படி போண்டாவாக செய்து பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும். இட்லிமாவு மிகவும் தண்ணியாக இல்லாமல் இருந்தால் நல்லது. அப்படி தண்ணீயாக இருந்தால் அத்துடன் சிறிது அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.