மௌனமே
மௌனிக்கிறது என்னிடம்
நானும் மௌனிக்கிறேன்
என் இதயத்திடம்
எப்போதும் நான்
கேட்க்கும் கேள்விக்கு
என் இதயம் மௌனிக்கும்
இன்று என் இதயம்
கேட்க்கும் கேள்விக்கு
என்னிடம் சொல்ல
வார்த்தைகள் இல்லாமல்
நானும் மௌனமாய்
மௌனமாய் எங்களுக்குள்ளே
யுத்தம்
சொல்ல முடியாத வலிகளின்
சொல்ல கூடிய மொழி
மௌன மொழி ஆகி போனது