உன் வரவுக்காக
காத்திருக்கிறேன்
காத்திருப்பதிலும்
சுகமாம்
ஆம் சுகம் தான்
உன் நினைவுகளை
சுமந்த படி
நீ பேசிய வார்த்தைகளை
சிந்தித்தபடி
நீ செய்த குறும்பை
ரசித்து சிரித்த படி
உன் அன்பை எண்ணி எண்ணி
மகிழ்ந்த படி
ஆயிரம் உறவு உன்னை சுற்றி
இருந்தாலும்
என்னை மட்டுமே
உன் மொத்த உறவாக நினைத்த
உன் மனதை வியந்த படி ...
உன்னிலே கலந்து
கரைந்து முழ்கி
முத்தெடுத்து கொண்டிருக்கிறேன்
உன்னை எதிர் பார்த்து ...