Author Topic: ~ வாய் துர்நாற்றத்தை இயற்கை முறையில் தடுக்க :- ~  (Read 473 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226403
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாய் துர்நாற்றத்தை இயற்கை முறையில் தடுக்க :-





ஏலக்காய்
உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

கொத்தமல்லி
கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

கிராம்பு/லவங்கம்
உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

புதினா
நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

கொய்யாப்பழம்
பழங்களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட்களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

மாதுளை
அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம். ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.