பெண்ணே நீயும் பெண்ணா
இதழ்கள் சொல்லாத
உன் இதயத்தின் இரகசியம் ஒன்றை
காதல் என காட்டிக் கொடுக்கிறது என்னிடம் .
நீ காகிதத்தில் கிறுக்கியக் கவிதையொன்று !
கட்டி அணைக்க இயலாத எழுத்துக்களிலும்,
மறைத்து வைக்க இயலாத ஊடல்களிலும்
மெல்ல மெய்மறந்து உறங்கிபோகிறேன்
உன் கவிதை தீண்டிய மயக்கத்தில்
காதல் உண்ட மங்கையென
எத்தனை முறை பார்த்தாலும்
என்னை நான் இழக்கிறேன்
அத்தனை இன்பங்கள்
உன் முதல் கடிதம்
உன் முதல் முத்தம்
உன் முதல் சந்திப்பு
இன்னும் என்னுள்
இனிமையை பசுமையாய் மனதுக்குள் பூட்டிய தேன்
ஊற்றாய் பொங்கும் என் உள்ளம்
பெண்ணே நீ தான் புயலோ
பெண்ணே நீதான் வானவில்லோ
பெண்ணே நீதான் சாரல் மழையோ
என்னை வதைக்கிறாய்
என்னை சிதைக்கின்றாய்
இப்போது ஏனோ மறைக்கின்றாய்
உன் காதலை மட்டுமல்ல
உன் இதய துடிப்பினையும்
என்றும் அன்புடம் தர்ஷன்