என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - 1 கப்,
பயத்தம் பருப்பு - 1/2 கப்,
வெல்லம் - 1 1/2 கப்,
தண்ணீர் - 1/2 கப்,
நெய் - 1/2 கப்,
ஏலக்காய், முந்திரி சிறிதளவு.
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தைக் கொதிக்க வைத்து வடிகட்டவும். கடாயில் நெய் விட்டு அரைத்த பருப்பை சேர்த்து கைவிடாமல் கிளறி நன்றாக வெந்தவுடன் வெல்லப் பாகை சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.