Author Topic: அவல் ரோல்  (Read 588 times)

Offline kanmani

அவல் ரோல்
« on: August 12, 2013, 10:40:00 PM »
தேவையான பொருட்கள்:

அவல் - 35 கிராம்
முட்டை - 1 (நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - 3
மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
வேர்க்கடலை - 25 கிராம் (வறுத்தது)
மாங்காய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவலை நன்கு நீரில் கழுவி , நீரை முற்றிலும் வடித்துவிட வேண்டும். அடுத்து வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் அவல், வேர்க்கடலை பொடி, மிளகாய், கொத்தமல்லி, மாங்காய் தூள், உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து, கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

அந்த சமயத்தில் உருளைக்கிழங்கு கலவையை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து, பின் சுருட்டி, அதனை அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெய் காய்ந்ததும், அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்தையும் செய்தால், சூப்பரான அவல் ரோல் ரெடி!