Author Topic: ~ வியக்க வைக்கும் சுரங்கப் பாதைகளும், சுவாரஸ்யங்களும் ~  (Read 1179 times)

Online MysteRy

வியக்க வைக்கும் சுரங்கப் பாதைகளும், சுவாரஸ்யங்களும்

நினைத்ததை சாதிக்கத் துடிக்கும் மனிதனுக்கு மலையும், கடலும் ஒரு பொருட்டல்ல என்பதை இந்த படங்களில் வரும் சுரங்கப் பாதைகள் ஒரு சான்றாக இருக்கும்.

கனவிலும் நினைத்து பார்த்திராத திட்டங்களை தனது 'சிறு' மூளையால் செய்யும் செயல்படுத்தும் திறன் படைத்த மனிதனின் முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த சுரங்க பாதைகளும், குகைகளும் உங்களை நிச்சயம் வியக்க வைக்கும்.



கடலுக்குள் புகுந்த சாலை


 
டோக்கியோ விரிகுடாவில் அமைக்கப்பட்டிருக்கும் கடல் வழி சுரங்கப் பாதை கனஹவாவலுள்ள கவாஸாகி நகரையும், சிபாவிலுள்ள கிஸரஸு நகரையும் இணைக்கிறது. இது அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை எண் 409 ஆகும். மொத்தம் 14 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையில் 4.4 கிமீ நீளம் கான்கிரீட் பாலமாகவும், 9.6 கிமீ தூரம் சுரங்கப் பாதை கடலுக்குள்ளும் அமைக்கப்பட்டுள்ளது.

Online MysteRy

செயேன் குகை



பார்ப்பதற்கு பரம சாதுவாக தெரியும் இந்த சுரங்க வாயிலின் உள்ளேதான் அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு துறை கட்டளை மையம் செயல்படுகிறது. 1947ல் நியூயார்க்கிலிருந்து கட்டளை மையத்தை நாட்டின் மையப் பகுதிக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த செயற்கை குகை மலையை குடைந்து அமைக்கப்பட்டது. 1961ல் இந்த கட்டளை மையத்துக்கான குகை குடையும் பணி துவங்கியது. 1966ல் செயல்பட துவங்கிய இந்த மையத்தில் ஏவுகணை எச்சரிக்கை மையமும், கட்டளை மையமும் செயல்பட துவங்கியது.

Online MysteRy

கியூ ஷி குகை



வியட்நாமில் இருக்கும் கியூ ஷி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த குகையில் ஏராளமான குகை வழிப்பாதைகள் இணைப்பு பெற்றிருக்கின்றன. வியட்நாம் போரின்போது இந்த குகைகளில்தான் வியட்நாம் கம்யூனிஸ்டு ராணுவத்தினர் மறைந்திருந்து அமெரிக்கப் படைகள் மீது கொரில்லா தாக்குதல்களை நடத்தினர்.

Online MysteRy

ஈசன்ஹோவர் குகை



அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், டென்வர் நகரில் மேற்கில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஈசன்ஹோவர் குகை வழிப்பாதை 80கிமீ நீளம் கொண்டது. இது நான்கு வழிப்பாதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து அமைந்திருக்கும் உலகின் மிக உயரமான குகை வழிப்பாதை இது.

Online MysteRy

லேர்தல் குகை



நார்வே நாட்டின் ஆஸ்லோ- பெர்ஜென் நகரங்களை இணைக்கும் குகை வழிப்பாதைதான் லேர்தல் குகை வழிப்பாதை. 1995ல் கட்டுமானப் பணிகள் துவங்கி 2000ம் ஆண்டில் திறக்கப்பட்டது. 5.5 கிமீ தூரத்துக்கு மலையை குடைந்து அமைக்கப்பட்ட இந்த குகை வழிப்பாதையில் அவசர கால வழிகள் இல்லாததால் தீ அணைப்பு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Online MysteRy

அஞ்சல் ரயில்



லண்டனின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருக்கும் பேடிங்டன் தலைமை அஞ்சலகத்துக்கும், கிழக்கு தலைமை அஞ்சலகத்துக்கும் எளிதாக கடிதங்கள் மற்றும் பொருட்களை விரைவாக அனுப்பும் வகையில் ஆளில்லா எலக்ட்ரிக் ரயில்கள் குகை வழிப்பாதையில் இயக்கப்பட்டன. சிறிய பெட்டிகளை கொண்ட இந்த பார்சல் ரயில்கள் 1927ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இயக்கப்பட்டன. மொத்தம் 10.5 கிமீ நீளம் கொண்ட இந்த குகை வழிப்பாதையில் 8 ரயில் நிறுத்தங்கள் இருந்தன.

Online MysteRy

சிங்கப்பூர் எம்ஆர்டி Singapore MRT



சிங்கப்பூரில் வடகிழக்கு எம்ஆர்டி ரயில் முழுக்க முழுக்க சுரங்கப் வழிப்பாதையில் இயக்கப்படுகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய சுரங்க ரயில் பாதை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் டிரைவர் கிடையாது. தானியங்கி முறையில் இயக்கப்படுகிறது.

Online MysteRy

சுரங்க வணிக வளாகம்



கனடாவின் ஒன்டாரியோ நகரின் டவுன்டவுன் டொரோன்டோ பகுதியில் 28 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் சுரங்க நடைபாதைதான் ,உலகின் மிகப்பெரிய சுரங்க வணிக வளாக பகுதியாகும். இந்த சுரங்க நடைபாதை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

Online MysteRy

செய்கன் சுரங்க பாதை



ஜப்பானில் சுகரூ மற்றும் ஆமோரி பகுதிகளை இணைக்கும் செய்கன் சுரங்கப் பாதையை ஜப்பானிய ரயில்வே துறை அமைத்துள்ளது. 23.3 கிமீ நீளம் கொண்ட இந்த சுரங்க ரயில் பாதையின் 14.5 கிமீ தூரம் கடலுக்கடியில் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிக ஆழமான, நீளமான கடல் வழி சுரங்கப் பாதை இது.

Online MysteRy

யெர்பா சுரங்க பாதை



அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ல ஓக்லேண்ட் பகுதியையும், சான் பிரான்ஸிஸ்கோவையும் இணைக்கும் வகையில் சான் பிரான்ஸிஸ்கோ விரிகுடாவில் இந்த பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதையின் வழியில் யெர்பா பியூனா தீவில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.