என்னென்ன தேவை?
வெள்ளை இடியாப்பம் - 1 கப்,
பச்சை மிளகாய் - 3,
கெட்டித் தயிர் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - அலங்கரிக்க,
கடுகு, எண்ணெய் - தாளிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து வெள்ளை இடியாப்பத்தின் மீது சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன் கெட்டித் தயிரும் உப்பும் சேர்க்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும். கடைகளில் கிடைக்கிற இன்ஸ்டன்ட் இடியாப்பத்தையும் உபயோகிக்கலாம். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் ரெடிமேட் இடியாப்பத்தை போட்டு 5 நிமிடங்கள் ஊறவிட்டு பின் வடித்தால் இடியாப்பம் கிடைத்துவிடும்.