Author Topic: ~ இந்தியாவின் மின்சாரம் நிலைப்பாடு ~  (Read 918 times)

Offline MysteRy

இந்தியாவின் மின்சாரம் நிலைப்பாடு

கரண்ட் எப்போ வரும் எப்போ போகும்னு யாருக்கும் தெரியாது, ஆன தேவைப்படும் பொழுது கண்டிப்பா இருக்காது. இதுதாங்க நம் நாட்டின் உண்மையான நிலைமை. நம்ம நாட்டில் இருக்கும் பல பிரச்சனைகளில் இந்த மின்சார பிரச்சனையும் ஒன்று. இந்த பிரச்சனைய சரி செய்ய எதேனும் முயற்சி எடுத்தலும்? அதற்கும் பல எதிர்ப்புகள், பல குழப்பங்கள். மேலும் நம் நாட்டில் உற்பத்தி ஆகும் மின்சாரம் பொதியதாக இல்லை, இன்னும்அதிகமாக தேவைப்படுகிறது.

நம் இந்தியாவில் மின்சாரத்தை பல வழிகளில் உற்பத்தி செய்கிறோம், இருந்தாலும் நம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தால் நம் தேவைக்கு இடு கொடுக்க முடியவில்லை. மின் உற்பத்தியை அதிகரிக்கவும், மின் துறை வளர்ச்சி பதையில் கொண்டு செல்ல, மத்திய மின் துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா பல முயற்சிகளை செய்து வருகிறார்.

மேலும் இங்கு நடப்பு நிதியண்டில் 2013-14 இந்தியாவின் பல பகுதிகளில், சப்ளையில் இருக்கும் மின்சாரத்தின் அளவும், பற்றகுறையான மின்சாரத்தின் அளவும் பட்டியலிட்டு உள்ளது.



வடக்கு பகுதி



நடப்பு நிதியண்டில் 2013-14 இந்தியாவின் வடக்கு பகுதிக்கு சப்ளை செய்யபடும் மின் அளவு 46,879 மெகா வாட், தேவைபடும் மின் அளவு 47,500 மெகா வாட், பற்றகுறையாக 621 மெகா வாட் உள்ளது.

Offline MysteRy

மேற்கு பகுதி



இந்தியாவின் மேற்கு பகுதிக்கு தேவைபடும் மின் அளவு 43,456 மெகா வாட், ஆனால் சப்ளை செய்யபடும் மின் அளவு 46,389 மெகா வாடாகும், இதனால் மேற்கு பகுதியில் உபரியாக 2,934 மெகா வாட் உள்ளது.

Offline MysteRy

தெற்கு பகுதி



தெற்கு பகுதிக்கு (ஆதாவது நம்ம ஏரியா பாஸ்) தேவைபடும் மின் அளவு 44,670 மெகா வாட், ஆனால் சப்ளை செய்யபடும் மின் அளவு 33,001 மெகா வாட் மட்டுமே, இதனால் நம் தெற்கு பகுதிக்கு மட்டும் சுமார் 11,669 மெகா வாட் மின்சாரம் பற்றகுறையாக உள்ளது (என்ன கொடும சார் இது!!).

Offline MysteRy

கிழக்கு பகுதி



இந்தியாவின் கிழக்கு பகுதிக்கு தேவைபடும் மின் அளவு 18,257 மெகா வாட், ஆனால் சப்ளை செய்யபடும் மின் அளவு 19,700 மெகா வாடாகும், இதனால் இப்பகுதியில் உபரியாக 1,443 மெகா வாட் உள்ளது.

Offline MysteRy

வடக்கு கிழக்கு பகுதி



நடப்பு நிதியண்டில் 2013-14 இந்தியாவின் வடக்கு பகுதிக்கு சப்ளை செய்யபடும் மின் அளவு 2,025 மெகா வாட், தேவைபடும் மின் அளவு 2,251 மெகா வாட், இதனால் இப்பகுதியில் மின் பற்றகுறையாக 226 மெகா வாட் உள்ளது.

Offline MysteRy

மின்சாரம்


 
கரண்டை நம் தினமும் பயன்படுத்துகிறோம், இதை உபயோகிக்காமல் ஒரு நாள் கூட நம்மால் இருக்க முடியாது என்றே சொல்லாம். ஆனால் இந்த கரண்டை கண்டுப்பிடித்தவர் யார் என்று தெரியுமா பாஸ் உங்களுக்கு??? தெரிந்தால் உடனே இங்க சொல்லுங்க.