பொடுகு தொல்லையால் அவதியா?
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை முந்தைய நாள் இரவில் தண்ணீரில் ஊறப் போடவும்.
காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரை மணிநேரம் அப்படியே ஊறவிடவும்.
பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவி விடவும். கடைசியாக தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும்.
இதுபோக, வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவரவும். அப்புறம் என்ன...
பொடுகு மறைந்துவிடும்.